dinamalar telegram
Advertisement

சென்னை, கோவையில் ஓட்டுப்பதிவு குறைய காரணம் என்ன? தமிழகத்துக்கு தேவை புதிய வாக்காளர் பட்டியல்

Share
Tamil News
முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் போன்றவர்களின் பெயர்களை எடுக்காமல் இருப்பதால் தான் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகி, வாக்குப்பதிவு சதவீதம் குறைவதாக புகார் எழுந்துள்ளது.

கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் தமிழகம், வாக்குப்பதிவு சதவீதத்தில் மிகவும் பின் தங்குவது தொடர்ந்து வருகிறது. படித்த, மேல்தட்டு மக்கள் பலரும் வாக்களிக்க வராததே இதற்குக் காரணமென்று கருதப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வாழும் சென்னை பெருநகரத்தில்தான் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவுள்ளது.

அடுத்ததாக, கோவை மாவட்டத்தில் இது முறையே 75.18 சதவீதம், 68.13 சதவீதம் என குறைந்து 66.98 சதவீதமாக இப்போது பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 2011ல் 78.01 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 2016ல் 72.68 ஆகக்குறைந்து, இப்போது 67.48 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 2011ல் 71.94 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 70.53 சதவீதமாகக் குறைந்து, இந்தத் தேர்தலில் 69.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.காரணம் என்ன?இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில் வளர்ச்சி நிறைந்த பகுதிகளாகும். இங்கு ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரிப்பது ஒரு புறமிருக்க, குடியிருப்புகளில் இடம் பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகம். இவ்வாறு இடம் பெயர்வோர், இறப்பவர்கள் போன்றோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் நீக்குவதில்லை; மாறாக புதிய வாக்காளர் சேர்த்தல் மட்டும் அதிகம் நடக்கிறது என்ற புகாரும் உள்ளது.

இதற்கேற்ப இந்தத் தேர்தலுக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலேயே குடியிருப்புகள் மாறியவர்கள், இறந்தவர்கள் என பல ஆயிரம் பேர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.முகவரி மாறியவர்களில் மிகமிகக்குறைவான சதவீதம் பேர்களே, அதற்குரிய படிவங்களைக் கொடுத்து, தங்களுடைய புதிய முகவரிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றிக் கொள்கின்றனர். இந்தக் காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அவர்கள் வாக்களிக்க வர இயலாத நிலை உள்ளது. இதுதான் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவில் குறைவதற்கு முக்கியக் காரணமென்று ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீர்வு என்ன?இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் அனைத்தையும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டுமென்ற ஆலோசனையும் முன் வைக்கப்படுகிறது. அதேபோன்று, தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இந்த ஆண்டில் நடக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்தால், அடுத்த லோக்சபா தேர்தலில் நிச்சயமாக வாக்குப்பதிவு சதவீதம் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு, இதில் சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம்.

-நமது சிறப்பு நிருபர்-

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • THANGARAJ - CHENNAI,இந்தியா

  தேர்தல் ஆணையம் அல்லது தேர்தல் அலுவலர் அல்லது உள்ளூர் தேர்தல் அலுவலகம், புதிய / முகவரி மற்றம் செய்ய முயற்சி செய்யும் வாக்காளர்களின் சேர்ப்பு அலுவலர், பழைய நடைமுறையில் இருக்கிறார்கள், உதாரணமாக BSNL தரைவழி அல்லது postpaid பில் மட்டும் தான் முகவரிக்கு தகுதி ஆனது என்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் BSNL வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டது. பெரும்பாலும் AIRTEL / JIO Broadband or Fibernet பயன்பாட்டில் உள்ளது. அதன் பில் முகவரி மாற்றத்துக்கு பயன் படுத்ததாலாம் அல்லவா? அவை ஏற்றுகொள்ள அறிவிக்கலாம். எங்காவது ஒரு ஒரு இடத்தில் முகவரி மாற்றினால் தான் அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு இடத்திலும் முகவரி மற்ற முடியும். நன்றி

 • chennai sivakumar - chennai,இந்தியா

  செல்வா சூப்பரா ஒரு சிக்சர் அடிச்சீங்க

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  நானும் என் மனைவியும் புதிய் வீட்டிற்கு மாறி வந்ததால் (பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி மற்றும் பழைய வார்டு) முகவரி மாற்றம் கொடுத்தோம். புதிய வாக்களிக்கும் இடம் எங்கள் வீட்டில் இருந்து 8 கி.மீ. அதுவும் எனக்கும் என் மனைவிக்கும் வெவ்வேறு இடம். (4 கிமீ தொலைவில்). தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் பயனில்லை. என் வயது 71 மனைவி வயது 64.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தம்பி....தங்க காசு இன்னும் வரல

 • V Sathyanarayanan - Chennai,இந்தியா

  முகவரி மாற்றம் மற்றும் பெயர் திருத்தல் சம்பந்தமாக நான்கு தடவை வேணுங்கிற ஆவணங்களை கொடுத்ததும் தமிழக தேர்தல் ஆனணயத்திலுள்ள ஊழியர்கள் சரிவர செயல்படவில்லை. இதற்காக எவ்வளவோ முயற்சி எடுத்தும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க படவில்லை. நேரில் சந்தித்தும் பிரயோசனமில்லை. இது ஒரு வாக்காளர் குடும்பத்தின் குற்றச்சாட்டு. எங்க குடும்பத்தில் நானும் எனது மனைவியும் எங்கள் ஜனநாயக கடமையை செலுத்த முடியவில்லை. எங்களது மாதிரி எனக்கு தெரிந்த சுமார் பத்து குடும்பங்கள் அவர்களது வாக்குகளை போட முடியாமல் போனது. இனி வருங்காலத்தில் இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வது தமிழக அரசின் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். வாக்காளர்கள் ஏதேனும் தங்களை பற்றின திருத்தங்களை செய்ய முன் வந்தால் அதை உடனே நிவர்த்தி பண்ண வேண்டும். மாற்றம் செய்ய பட்ட பிறகு, அவர்களின் கைபேசிக்கு தகவல் அளிக்க வேண்டும். வாக்காளர்களும் அதனை பார்த்து அவர்கள் எதிர்பார்த்த திருத்தங்கள் செய்ய பட்டிருக்கிறதா என சரி பார்த்து வாக்காளர் அட்டை பெற்று கொள்ள வேண்டும்.

Advertisement