இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பொருளாதாரம் , நடப்பு ஆண்டில், 12.5 சதவீதமாக அதிகரிக்கும் என, பன்னாட்டு நிதியம் கணித்து அறிவித்துள்ளது. இது, சீனாவின் வளர்ச்சியை விட அதிகமாகும். இவ்வளவுக்கும், கொரோனா காலத்தில் அதிக வளர்ச்சியை கண்ட நாடாக, சீனா இருந்தது.
கடந்த, இரு மாதங்களாக, இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதற்கான சான்றுகளை நாங்கள் காண்கிறோம்.இந்தியாவை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பில், சிறு மாற்றத்தை செய்துஉள்ளோம். நடப்பு ஆண்டில், முந்தைய கணிப்பை விட, ஒரு சதவீதம் அதிகமாக இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பணக்கார வர்க்கத்தினருக்காக இயங்கும் மத்திய அரசிடம் நிதியே இல்லை. இந்த வரி அந்த வரி என்று மக்களின் மண்டமேலயே நங்குநங்கென்று போட்டு புடுங்குது. தேசிய சொத்துக்களான ஏர் இந்தியா பிஎஸ்என்எல் பிபிசிஎல் எல்லாம் விற்று தின்னப் பார்க்கிறது. எவனும் வாங்க முன்வரவில்லை. சமையல் வாயு முதல் தங்கம் வரை விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் 2 ரூபாய் இருந்ததை அம்பது ரூபாய் ஆக்கி விட்டது. டோல் சார்ஜ் களை ஏற்றி விட்டது. இதுதான் பொருளாதார முன்னேற்றம். நல்ல ஜோக்