dinamalar telegram
Advertisement

முக கவசம் அணிய வேண்டும்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Share
Tamil News
புதுடில்லி ;“கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தவேண்டும்,” என, நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக் கொண்டார்.

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார தினமான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' வாயிலாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:நம் பூமியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவோரை பாராட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்த உலக சுகாதார தினம்.சுகாதாரத் துறையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நாம் அளிக்கும் ஆதரவுக்கான உறுதிப் பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகும்.

இந்நாளில், கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை நாம் முறையாக பின்பற்றவேண்டும்.இதேபோல், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும்.நாட்டு மக்கள், தரமான, அதே நேரத்தில் மலிவான செலவில் மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்ட திட்டங்கள், மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்சீக்கிய குரு தேஜ்பகதுாரின், 400வது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி, ஓராண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, பிரதமர் மோடி தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு தலைவர், கோபிந்த் சிங் லோங்கேவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடக்க உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13 + 11)

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தேர்தல்ங்ர பேருல அசாம், மே வங்கம், கேரளா, தமிழகம், புதுவைன்னு.... போயி கூட்டம் கூட்டி பத்த வச்சிட்டு, இப்போ கத்தி என்ன பிரயோசனம். பொறுப்பிலே இருக்கிற நீங்களே இப்படி செய்தா, மத்தவங்க எப்படி நடந்துக்குவாங்க ?

 • Manivannan - chennai,இந்தியா

  Mugamkavam anivarukku, thadupushi thavaillai

 • Manivannan - chennai,இந்தியா

  Election potha mugam kavasam aniya solli irkkulama, election commisionar solliirukalam , doctor korna pattri solluvathu thappa agivittathu,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  முதலில் பிரதமர் மாஸ்க் போல வேண்டும். பிறகு பிறத்தியார் பற்றி பேசலாம்.

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  உங்க பாட்ஷா பாய் எப்போதும் வாய புளந்துகிட்டே நடக்கிறாரே.

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

   கொல்கத்தாவில் ஊர்வலம் என்று சுத்தி கொண்டு இருக்கான் அவனை நிறுத்த சொல்லு அப்புறம் எல்லாம் சரியாகி விடும்

Home கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் வலியுறுத்தல் (11)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மறுபடியும் கை தட்டல், விளக்கு ஏற்றலா மறுபடியும் முதலில் இருந்தா?

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை மட்டுமாவது நிறுத்துங்கன்னு கரடியா கத்தினோமே.... உங்க காதுல விழுந்துச்சா ?

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  1 ராணுவ வீரர் சிறைபடுத்தபட்டுள்ளது என்னாச்சு ?

 • ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) - Gummidipoondi,இந்தியா

  இந்த ஏழு வருட மத்திய ஆட்சியாள நாடே நாசமா போச்சு.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   அப்படி எதிலெல்லாம் நாசமா போச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லாருக்கும். மதம் மற்ற முடியவில்லை, காஸ்மீரில் கல் எரிய முடியவில்லை, எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்ய முடியவில்லை, ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க முடியவில்லை, கோடிகளில் கொள்ளை அடிக்க முடியவில்லை, அடித்து வைத்துள்ள பணத்தை பத்திரப்படுத்தமுடியவில்லை, டோல் சிஸ்டத்தில் தில்லுமுல்லு செய்ய முடியவில்லை, இந்து மதத்தை இழிவாக பேச முடியவில்லை, கருப்பு பணத்தை சேர்க்க வழியில்லை, வாரிசு அரசியல் செய்ய முடியவில்லை, ஜாதி சண்டைகள் செய்து அரசியல் செய்ய முடியவில்லை, மத கலவரங்களை தூண்ட முடியவில்லை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதைத்தானே தாங்களும் சொல்ல வருகிறீர்கள்?

 • ஆப்பு -

  சொகுசு விமானத்தில் வந்து கொரோனா பரவக்.காரணமா இருந்தவங்க இன்னிக்கி கொரோனாவை ஓட்டுறாங்களாம். சிரிப்புத்தான் வருகுதையா...

  • ShivRam ShivShyam - Coimbatore

   யாரை சொல்லற ..மாநாடு நடத்திய மர்ம நபர்களையா ??

 • Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  டாக்டர் மீது கல் விட்டு எறிந்த / எச்சை துப்பிய கூட்டத்திற்கு அவ்ங்களுக்கு கைத்தட்டுங்க /விளக்கேற்றி நன்றி தெரிவிங்க என்று சொன்னால் கோவம் தான் வரும்

 • வெற்றிக்கொடி கட்டு - ஓட்டுக்களை விற்றவர்கள் அரசியல்வாதிகளை குறை சொல்லாதீர்கள்,இந்தியா

  உங்க பிரச்சார கூட்டத்துல மாஸ்க் போடாம கலந்துக்கிட்டவங்க யாருமே இல்லையா ?

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அவங்களா ஆளுறது ?

Advertisement