dinamalar telegram
Advertisement

ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Share
Tamil News
புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி வேகமெடுத்துள்ளது. உலகிலேயே அதிக வேகமாக தடுப்பூசி வழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஒரே நாளில், 31 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.


நம் நாட்டில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி வழங்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், புதிதாக, ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 736 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய எட்டு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.அதே நேரத்தில், தடுப்பூசி வழங்கும் பணியும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்குவதில், அமெரிக்காவை மிஞ்சியுள்ளோம். நேற்று முன்தினம் மட்டும், 30 லட்சத்து, 93 ஆயிரத்து, 861 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 81 நாட்களில், 8.70 கோடி பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.மொத்தம், 13 லட்சத்து, 32 ஆயிரத்து, 130 அமர்வுகளில், எட்டு கோடியே, 70 லட்சத்து, 77 ஆயிரத்து, 474 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணியாளர்களில், 89 லட்சத்து, 63 ஆயிரத்து, 724 பேருக்கு, முதல், 'டோஸ்'; 53 லட்சத்து, 94 ஆயிரத்து, 913 பேருக்கு, இரண்டாவது, 'டோஸ்' வழங்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களில், 97 லட்சத்து, 36 ஆயிரத்து, 629 பேருக்கு முதல், 'டோஸ்'; 43 லட்சத்து, 12 ஆயிரத்து, 826 பேருக்கு, இரண்டாவது, 'டோஸ்' வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களில், 60 வயதுக்கு மேற்பட்டோரில், மூன்று கோடியே, 53 லட்சத்து, 75 ஆயிரத்து, 953 பேருக்கு, முதல், 'டோஸ்'; 10 லட்சத்து, 787 பேருக்கு இரண்டாவது, 'டோஸ்' வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், 45 - 60 வயதுக்குட்பட்டோரில், இரண்டு கோடியே, 18 லட்சத்து, 60 ஆயிரத்து, 709 பேருக்கு, முதல், 'டோஸ்'; நான்கு லட்சத்து 31 ஆயிரத்து, 933 பேருக்கு இரண்டாவது, 'டோஸ்' வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை?



தடுப்பூசி கையிருப்பு குறைந்து உள்ளதாகவும், உடனடியாக, 'சப்ளை' செய்ய வேண்டும் எனவும், மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா அரசுகள் கூறியுள்ளன.'மஹாராஷ்டிராவில் நாளொன்றுக்கு, 4.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குகிறோம். மத்திய அரசு கூறியுள்ளபடி, ஆறு லட்சம் பேருக்கு வழங்க தயாராக உள்ளோம். 'ஆனால், தற்போது 14 லட்சம் தடுப்பூசிகளே இருப்பில் உள்ளன. அது மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும். வாரத்துக்கு, 40 லட்சம் தடுப்பூசி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்' என, மஹாராஷ்டிரா சுகாதார அமைச்சர், ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.'ஆந்திராவில் தற்போது, நாளொன்றுக்கு, 1.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குகிறோம். அதை, மூன்று லட்சமாக உயர்த்த தயாராக உள்ளோம். ஆனால், போதிய அளவுக்கு, 'ஸ்டாக்' இல்லை.


தற்போது. 3.7 லட்சம் மருந்துகளே உள்ளன. இரண்டு நாட்களுக்கு கூட வராது. அதனால், ஒரு கோடி தடுப்பூசி கேட்டுள்ளோம்' என, ஆந்திர சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: தடுப்பூசிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்கும் பணி குறித்து, மாநில அரசுகளுடன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தேன். அப்போது துவக்கத்திலேயே இந்த உறுதியை அளித்துள்ளேன்.எந்த மாநிலத்திலும், தடுப்பூசி வழங்கும் பணி நிற்பதற்கு அனுமதிக்க மாட்டோம். தேவையான அளவு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

அலுவலகத்திலும் போடலாம்



தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்தும் வகையில், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், மத்திய சுகாதார செயலர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், 'பொது மற்றும் தனியார் நிறுவனங்களில், 45 வயதுக்கு மேற்பட்ட, 100 ஊழியர்கள் இருந்தால், அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள தடுப்பூசி மையங்களுடன் இணைந்து இதை செயல்படுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement