தங்கம் விலை ரூ.608 உயர்வு
சென்னை:தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 608 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், இம்மாதம், 5ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,258 ரூபாய்க்கும்; சவரன், 34 ஆயிரத்து, 64 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 69.30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம், தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 76 ரூபாய் உயர்ந்து, 4,334 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 608 ரூபாய் அதிகரித்து, 34 ஆயிரத்து, 672 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 1.60 ரூபாய் உயர்ந்து, 70.90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தொழில் துறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால், தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை உயர்ந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!