dinamalar telegram
Advertisement

கோயில் அடிமை நிறுத்து இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

Share
மதுரை: 'கோயில் அடிமை நிறுத்து' இயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.

கோயில்களே மனிதனின் வளர்ச்சிக்கான மையங்களாக உள்ளன. தினசரி பூஜைகள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடக்கின்றன. 64 கலைகளும் வளர்க்கப் படுகின்றன. தேவாரம், பிரபந்தம் பாடுவதிலும் ராகங்கள் உள்ளன.

கோயில்களுக்கு தானங்கள்:தீர்த்தங்கள், தல விருட்சங்கள் என இயற்கையை, பஞ்ச பூதங்களை போற்றும் மதம் ஹிந்து மதம். இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்களை நாம் வளர்த்திருக்க வேண்டும். நம் முன்னோர்களும், அரசர்களும் கோயில்களை வெறும் கட்டு மானத்தோடு நிறுத்தவில்லை. பல ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடக்க பல தானங்களை தந்துள்ளனர். தீபம் ஏற்றக்கூட தனி தானம் உள்ளது.

ஆனால் கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்து' இயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.

பக்தர்கள் பங்களிப்பு:தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.

தற்போது பக்தர்களின் அன்பளிப்பு இருக்கிறது, பங்களிப்பும் இருக்க வேண்டும். நிர்வாகம், நிதி, நியமங்கள் அனைத்திலும் பக்தர்கள் பங்களிப்பு வேண்டும்.எனவே கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (90)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  கோயில் நிர்வாகம் நிச்சயமாக இந்துக்களின் கையில் வர வேண்டும். அதே சமயம், சாதி ரீதியாக கோயில்களில் மக்கள் நுழைவதற்கு இருக்கும் தடை நீங்க வேண்டும். எந்த சாதியை சேர்ந்தவரும், முறையாக ஆகம விதிகளையும், வழிபாட்டு முறைகளையும் கற்று தெரிந்தால் அவர்கள் பூசாரிகளாக இயங்க அனுமதி வேண்டும். இதற்கென்றே ஆகாம பாட சாலைகள் அமைக்கப்பட்டு, யாரெல்லாம் அதில் பயில விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இருக்க இடமும், பாடமும் கற்பிக்கப்பட வேண்டும். கோயில் பராமரிப்பு, சுற்றுப்புற சுகாதாரம் போன்றவற்றை நிர்வாகிக்க மக்களாலும் பயிற்சி கொடுக்க வேண்டும். தமிழிலும், சமிஸ்கிருதத்திலும் அர்ச்சனைகள் மக்களுக்கு செய்ய வழி செய்ய வேண்டும். அர்ச்சகர்கள் தமிழிலும், சமிஸ்கிருதத்திலும் வல்லமை பெற பயிற்சி கூடங்கள் கோயில்களில் அமைக்க வேண்டும். பெண்களுக்கும் எல்லாவற்றிலும் பயிற்சி அளிக்க வழி செய்ய வேண்டும். காலம் மாறி விட்டது. இன்றைய கால கட்டத்தில், பெண்களை ஒதுக்கக்கூடாது. ஆகம சிற்பக்கலைக்கு மீண்டும் கோயில்களிலும், கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பாடமாக சொல்லிக்கொடுக்கப் பட வேண்டும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற தமிழ் பக்தி வேதங்கள் பாடமாக எல்லா சிவ/வைணவ கோயில்களிலும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். புத்தக சாலைகள் திறக்கப்பட வேண்டும். வருகிறவர்களுக்கெல்லாம் உணவு கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்துக்கள் சீக்கிய குருத்துவாரங்களில் நடப்பது போல, உணவு சமைத்தல், துப்புரவு செய்தல், உணவு பரிமாறுதல் போன்ற சேவைகளில் அந்தஸ்து பார்க்காமல் பக்தியோடு ஈடுபட வேண்டும். பெரியானின் சிலைகள் இந்து கோயில்களின் முன்னாலிருந்து அகற்றப்பட வேண்டும். இப்படி அடிப்படை வழியில் மாற்றங்களோடு இந்து கோயில்களும், அறக்கட்டளைகளைகளும் இந்து சமுதாயத்தின் கையில் வந்தால் இந்து கலாச்சாரம் நல்ல எதிர்காலத்தை அடையும்.

 • SAPERE AUDE -

  இந்த மாதிரியான தனக்கு வேண்டாத பிச்சனைகளுள் தலையிட வேண்டுமா என்று காஞ்சி மடாதிபதி யோசிக்க வேண்டும். அவருக்குண்டான நியம நிஷ்டைகளை கவனித்து வந்தாலே போதும்.

 • SAPERE AUDE -

  இந்த மாதிரியான தனக்கு வேண்டாத பிச்சனைகளுள் தலையிட வேண்டுமா என்று காஞ்சி மடாதிபதி யோசிக்க வேண்டும். அவருக்குண்டான நியம நிஷ்டைகளை கவனித்து வந்தாலே போதும்.

 • Raja - Trichy,இந்தியா

  There should be proper qualification to become an archagar. குடும்பம், சாதி மற்றும் கோத்திர அடிப்படையில் அர்ச்சகர் ஆகும் தகுதியை முற்றிலும் மாற்ற அமைக்க வேண்டும்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அது என்னவோ இந்து கோவில்களை ஹிந்துக்கள் நிர்வகிக்கவேண்டும் என்றதும் மதமாற்ற மாஃபியாவின் அல்லக்கைகளும், இஸ்லாமிய ஆதரவாளர்களும் கிடந்தது கதறுகிறார்கள். ஹிந்து கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் மசூதிகளை, சர்ச்களை பற்றிய விபரங்கள் ஹிந்துக்களுக்கு தெரிந்துவிடும் என்று அலறுகிறார்கள். ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, நிலங்களை ஆட்டயப்போட்டு வைத்திருக்கும் கிரிமினல்கள் சிக்கிவிடுவார்கள். மாதம் ஐந்தாயிரம் பத்தாயிரம் வாடகைக்கு போகும் இடங்களை 130 ரூபாய்க்கும் 170 ரூபாய்க்கும் வாடாகையில் இருக்கும் தில்லாலங்கடிகளின் விபரங்கள் மக்களுக்கு தெரியவந்துடும்ல.

Advertisement