dinamalar telegram
Advertisement

105 வயது முதியவர் ஜனநாயக கடமை

Share
Tamil News
கோவை : கோவையில், 105 வயது முதியவர், ஓட்டளித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர், 1916 ஜூன், 1ல் பிறந்தவர். தற்போது இவரது வயது, 105. விவசாயியான இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
கடந்த, 1952ம் ஆண்டு முதல், அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டு அளித்துள்ளார். நேற்று காலை, முதியவர் தன் வீட்டில் இருந்து, அருகே இருந்த ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று, ஜனநாயக கடமையாற்றினார்.
மாரப்ப கவுண்டர் கூறுகையில், ''மக்களுக்கு நல்லது செய்வோரை தேர்வு செய்ய, அனைவரும் கட்டாயம் ஓட்டு அளிக்க வேண்டும்,'' என்றார்.
முதியவர் ஓட்டளித்து வெளியே வரும்போது, '105 வயதானவர் வாக்களித்து செல்கிறார்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். பணியில் இருந்த இளைஞர்கள், முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ganapati sb - coimbatore,இந்தியா

    arumai ainthil irandaay ulla chennai somberigal ivarai paarthu thiruntha vendum . thamilagathil naalil oruvaray ulla somberigalum thiruntha vendum

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.

  • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

    இவருக்கெல்லாம் தபால் வாக்கு மற்றும் கால்டாக்சி கிடையாதோ? அதுக்கெல்லாம் தனித் தகுதி வேறு ஏதாவது வைத்திருப்பார்கள்

    • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

      அவருக்கு வீட்டில் வந்து வாக்கை சேகரிக்க வழி உள்ளது. ஆனால் அவர் நேரடியாக வருகிறேன் என்று சொல்லிருப்பார். பலர் அவ்வாறு செய்வதுண்டு

  • subramanian -

    வாழ்க அந்த பெரியவர். வாழ்க நலத்துடன்

Advertisement