திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:
நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்., நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். அவர்,இ.பி.எஸ்., கையை துாக்கி பிடித்து, 'தி.மு.க., ஊழல் கட்சி' என்கிறார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து லியோனி பேசுகையில்
ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவாங்க.. 8 போல் இருந்த இடுப்பு பாரீன் மாட்டு பாலை குடிச்சு குடிச்சு பேரல் போலாகிடுச்சு என்றார்.
தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் ராசா மற்றும் பட்டிமன்ற நடுவர் லியோனி ஆகியோரின் அரசியல் தரம் தாழ்ந்த பேச்சுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: திமுக.,வினர் தேர்தல் பிரசாரத்தில் நிர்வாகிகள் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது கண்ணியக்குறைவான வார்த்தைகளை திமுக ஒரு போதும் ஏற்காது. மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் போது, கட்சியின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து பேச வேண்டும். திமுக நிர்வாகிகள் பேச்சை வெட்டியும், ஒட்டியும் தவறான பொருள்படும்படி பரப்புகின்றனர். எதிரிகளின் நோக்கத்தை அறிந்து திமுக நிர்வாகிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நம் ஹெச் ராஜா, SV சேகர், குஷ்பூ பேசியதைவிடவா திமுகவினர் கொச்சையாக பேசிவிட்டனர்? ரொம்பதான் பண்றீங்க...