இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சு!

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எழிலனை ஆதரித்து நேற்று முன்தினமும், பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சிவங்கரனை ஆதரித்து நேற்றும், ஆ.ராசா பேசியதாவது: இந்த சட்டசபை தேர்தலில், '10 ஆண்டு இருட்டுக்கு பின், விடியல் வேண்டும். கருணாநிதி ஆட்சி வர, ஸ்டாலின் முதல்வராக வேண்டும்' என்கிறோம். இ.பி.எஸ்.,சோ, '10 ஆண்டு நல்லாட்சி தொடர, எனக்கு ஓட்டளியுங்கள்' என்கிறார். இருவரையும் எடை போட்டு பார்ப்போம்.
ஜனநாயகத்தை காப்பாற்ற, சிறையில் இருந்தவர் ஸ்டாலின். கட்சியில், மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்து, தலைவரானார். ஆட்சி நிர்வாகத்திலும், எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என, உயர்ந்தார். இப்போது, முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து, சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, இ.பி.எஸ்.,சை யாருக்கும் தெரியாது. இவர், ஊர்ந்து போய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால், அவருக்கு புகழ். ஓராண்டாக கொடுத்த
விளம்பரத்தால், அதில் கிடைத்த லாபத்தால், பத்திரிகைகள், அவரை மிகப் பெரிய தலைவர் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்.,சுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது; பொது வாழ்வில், அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன; ஒன்றும் கிடையாது.

நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்., நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். அவர்,இ.பி.எஸ்., கையை துாக்கி பிடித்து, 'தி.மு.க., ஊழல் கட்சி' என்கிறார்.
அவர் ஊழல் என, '2 ஜி' வழக்கை கூறி இருக்கலாம். நான் வாய்தா வாங்காமல், நீதிமன்றம் சென்றேன். நானே வாதாடி வெற்றி பெற்று வந்துள்ளேன். எந்த கறையும் இல்லாத, எங்களை பார்த்து, 'தி.மு.க., ஊழல் கட்சி' என, மோடி கூறுகிறார்.
உலக வங்கியின், 4,000 கோடி ரூபாய் டெண்டரை, இ.பி.எஸ்., தன் உறவினருக்கு கொடுத்தார். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில், 'டெண்டர் எடுத்தவருக்கும், எனக்கும் தொடர்பு கிடையாது. என் மகன், அவரது மகளை கட்டியுள்ளான்' என்று, இ.பி.எஸ்., கூறினார். இது தான், இந்த ஆட்சியின் லட்சணம். ஊழல் ஆட்சியை, மோடி காப்பாற்றுகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.
கனிமொழி கண்டனம்!
முதல்வரின் பிறப்பு குறித்து, ராஜா ஆபாசமாக பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு, தி.மு.க., மகளிரணி தலைவியும், எம்.பி.,யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 'அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே, மனதில் வைத்துக் கொண்டால், இந்த சமூகத்திற்கு நல்லது. இது தான் திராவிட இயக்கமும், ஈ.வெ.ரா.,வும் விரும்பிய சமூக நீதி' என, கனிமொழி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (301)
ராசா ஒரு அயோக்கியன் ஒரு வடிகட்டிய முட்டாள் , அவன் ஸ்டாலினின் வழியை பின்பற்றுகிறேன் ஸ்டாலினும்கூட பாத்திமாவை பாலியல் துன்புறுத்திவந்தவன்தான் ஆகையால் தி மு க காரங்களையெல்லாம் அப்படிதான் செய்வார்கள் ,பரோட்டா கடையில் பணமில்லாமல் சாப்பாடுவார்கள் பெண்களை அடித்து ஏதுவார்கள் இப்பொழுது தி மு க பேச்சாளர்கெல்லாம் பெண்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள் லியோனி ,உதயநிதி போன்ற பொறுக்கிகள் பெண்களை இழிவுபடுத்திப்பேசுகிறார்கள் இவனுங்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமென்று நினைத்தால் நெஞ்சுபதைப்பதாக இருக்கிறது
வெட்கம் மானம் சூடு சொரணையற்ற தமிழக மாக்கள் இந்த திருட்டு கும்பல் மற்றும் அதே குட்டையில் ஊறிய அதிமுக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், தாமும் மானம் இல்லாமல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறர்
திரு ராசா வின் முழு காணொளியை பார்க்கும்பொழுது அவர் எந்த இடத்திலும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயை பற்றி தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லையே அவர் முதல்வர் பதவி பற்றி தானே கூறியிருக்கிறார். திரு பழனிச்சாமி அவர்களை முதல்வராக மக்கள் தேர்தெடுக்கவில்லையே அதைத்தான் சொல்லக்கூடாத உவமைகளின் வாயிலாக கூறினார். அதை திரு பழனிச்சாமி இப்படி தன்னுடைய தேர்தல் உத்திக்காக பயன்படுத்தியது தான் மிகக்கேவலம்.
இந்த ராசா பிறப்பறிந்தவரா
ராசா ஒரு எம்பீ ஒரு வடிகட்டிய முட்டாள் , அவன் ஸ்டாலினின் வழியை பின்பற்றுகிறேன் ஸ்டாலினும்கூட பாத்திமாவை பாலியல் துன்புறுத்திவந்தவன்தான் ஆகையால் தி மு க காரங்களையெல்லாம் அப்படிதான் செய்வார்கள் ,பரோட்டா கடையில் பணமில்லாமல் சாப்பாடுவார்கள் பெண்களை அடித்து ஏதுவார்கள் இப்பொழுது தி மு க பேச்சாளர்கெல்லாம் பெண்களை இழிவுபடுத்தி பேசிவருகிறார்கள் லியோனி ,உதயநிதி போன்ற பொறுக்கிகள் பெண்களை இழிவுபடுத்திப்பேசுகிறார்கள் இவனுங்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமென்று நினைத்தால் நெஞ்சுபதைப்பதாக இருக்கிறது