Load Image
dinamalar telegram
Advertisement

ஆரணி புதிய மாவட்டம்: இ.பி.எஸ்., உறுதி

Tamil News
ADVERTISEMENT
திருவண்ணாமலை:''ஆரணியை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், விவசாயிகள் நிறைந்த பகுதி, தமிழகத்தில், 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளோம். விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கூட்டுறவு கடன் தள்ளுபடியை எல்லாரும் தேர்தல் வாக்குறுதியில் கூறுவர். ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறாமல் முன்னதாகவே தள்ளுபடி செய்துள்ளது அரசு.

விவசாயிகளை இமை காப்பது போல் காப்பாற்றி வருகிறது. வீடு இல்லாத நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டி தரப்படும். விசைத்தறிக்கு, 1,000 யூனிட் மின்சாரமாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு மானியத் தொகை, 300 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு, தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் கொண்டுவரப்பட உள்ளன. அடுத்த ஆண்டுமுதல் அரசு பள்ளி மாணவர்கள், 600 பேர் மருத்துவராக முடியும். 'அ.தி.மு.க., இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும்' என, ஸ்டாலின் கூறுகிறார்.

இந்த மக்கள் வெள்ளத்தை வந்து பார்த்து, அவர் பேசட்டும். முதல்வர் பதவி வாங்கும்போது ஊர்ந்து போனேன் என்கிறார். நான் நடந்து போய் தான், அ.தி.மு.க., பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவால் முதல்வரானேன்.அண்ணாதுரை மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தான் முதல்வராக வேண்டும். ஆனால், அவரை ஏமாற்றி, குறுக்கு வழியில் தான் கருணாநிதி முதல்வரானார்.

அ.தி.மு.க., அரசு, ஒரு அதிகாரியை கூட மிரட்டியது கிடையாது. அரசு அதிகாரத்தில் இல்லாமலேயே, உதயநிதி, டி.ஜி.பி.,யையே மிரட்டுகிறார். ஆட்சியை இவர்கள் கையில் கொடுத்தால் நாடு தாங்குமா. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன், திருவண்ணாமலையை பிரித்து, ஆரணியை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அய்யத்துரை என்பவர் சொல்றார் " "ஊழல் குடும்பத்துக்கு சங்கூத போறோம்"" - யாரை என்று தெரிகிறதா? ராமதாஸ்/அன்புமணி குடும்ப த்தையும், மூப்பனார்/ வாசன் குடும்ப த்தையும் சொல்றார். இபிஎஸ் க்கு சொத்து கிடையாதா? அவரது வேட்புமனு விவரம் இதே பத்திரிகையில் வந்ததே..படிக்கலியா அய்யதுரை?? அடப்பாவமே

 • Loganathaiyyan - Kolkata,இந்தியா

  ஆரணி மாவட்டம் - இந்த சைடுலே விருத்தாச்சலம் மாவட்டம் - அந்த சைடுலே ???இதனால் என்ன உபயோகம் ஒரு மாவட்ட தலைவர் அந்த அந்த கட்சிக்கு அதிகாமாகும் அவ்வளவு தானே வளர்ச்சி அதே zero லெவெலில் தான் இருக்கும்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  . எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? தமிழகத்தில் ரயில்வே,தபால்துறை என எல்லா துறைகளிலும் 90% வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்திய மோடியையும் அதை பார்த்து க்கொண்டிருக்கு எடப்பாடியையும்,ஆட்சியை விட்டு அகற்றுவோம்

 • mupaco - Madurai,இந்தியா

  விருதுநகர் மாதிரி ஐந்துக்கும் மேற்பட்ட தாலுகாக்கள் உள்ளது நிறையவே பிரிக்கலாம்.

 • Nagercoil Suresh - India,இந்தியா

  10 . 5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரு சமுதாயத்திற்கு கொடுத்து மத்த அனைத்து சமுதாயத்தினரையும் ஏமாத்தி விட்டார் என மக்கள் கருதுகிறார்கள்... .மாவட்டங்களை பிரிப்பது தேர்தலில் அறிவிக்கும் அளவிற்கு ஒரு சாதனையா? சொந்த தொகுதிலாவது வெற்றிபெற முயற்சி எடுக்க வேண்டும்...

Advertisement