சேலம்: தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தி.மு.க.,வின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தயக்கம் இன்றி செல்வதும், அங்கு வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே நேரத்தில், கோவில்களுக்கு சென்றால், திருநீறை அழிப்பது, பிரசாதத்தை வாங்க மறுப்பது ஆகியவற்றை தொடர்கின்றனர். இதனால், தி.மு.க.,வை, பா.ஜ., மட்டுமின்றி ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை உட்பட, 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் உறுதிமொழி என்ற தலைப்பில், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளிக்க வலியுறுத்தி, ஹிந்து தெய்வங்களின் படங்களுடன் ஹிந்து அமைப்பினர், 'வாட்ஸ் - ஆப்', பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.மேலும் சேலம் மாவட்டத்தில் வீடுகள் தோறும், துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த துண்டு பிரசுரம் ஒரு சிறிய ஆரம்பம். திமுக தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி முப்பது ஆண்டுகாலம் மேற்கு வங்கத்தில் ஆட்சிசெய்த கம்யூனிஸ்டுகள் காணாமல் போனார்களோ, கூடிய சீக்கிரம் திமுகவும் இங்கு காணாமல் போகும். திமுக மின்சாரத்துல மட்டும் கைய வைக்கல, தேங்கூட்லயும் கையவச்சிருச்சு.