Load Image
Advertisement

காஞ்சி பட்டின் கலைநயம் பேசும் எட்டணா லுாம்ஸ் ஆப் காஞ்சி

 காஞ்சி பட்டின் கலைநயம் பேசும்  எட்டணா லுாம்ஸ் ஆப் காஞ்சி
ADVERTISEMENT
மதுரை : இன்றைய டிஜிட்டல் உலகில், இளைஞர்களின் மனநிலையை சிதைக்கும் விதமாக அலைபேசியில் வலம் வரும், 'கேம்'களுக்கு மத்தியில், நம் காஞ்சி பட்டின் ஓவியங்களின் கலைநய பெருமை பேசும், 'எட்டணா லுாம்ஸ் ஆப் காஞ்சி' என்ற, 'போர்ட் கேம்' ஒன்றை பெண் உருவாக்கி அசத்தியுள்ளார். '



இந்தியாவை பூர்வீகமாக கொண்டு, தற்போது ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் மதுமிதா மணி என்ற பெண் கூறியதாவது: நான் பிறந்தது கோல்கட்டா. வளர்ந்தது மும்பை,ஐதராபாத். கணவர் சுந்தரின் வேலை காரணமாக, தற்போது ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறேன். 2015 முதல், போர்ட் கேம் மேல் ஆர்வம் இருந்ததால், அடிக்கடி பல கேம்களை விளையாடுவேன்.அந்த அனுபவங்களை கொண்டு, நாமே ஒரு பாரம்பரிய பெருமை பேசும் போர்ட் கேம் உருவாக்கலாம் என திட்டமிட்டேன். இதற்காக, 'மேட் பார் பன் கேம்ஸ்' என்ற நிறுவனத்தை துவங்கினேன். அப்பா, மணி சி.இ.ஓ.,வாக இருக்கிறார்.கொரோனா ஊரடங்கு வந்ததால், தீவிரமாக முயற்சித்து, காலத்தால் மறக்கப்படும் காஞ்சிபுரம் பட்டின் கலைநயம் பேசும், 'எட்டணா லுாம்ஸ் ஆப் காஞ்சி' என்ற பெயரில், 'போர்ட் கேம்' உருவாக்கினேன்.


சென்னை பேஷன் டிசைனர் தர்ஷினி, கேமை வடிவமைத்து உள்ளார்.இந்த கேமை, 8 வயதுக்கு மேற்பட்ட, இரண்டு முதல், நான்கு நபர்கள் விளையாடலாம். அதிகபட்சம், 45 நிமிடத்தில் கேம் முடிந்து விடும்.தாயம் விளையாட்டில் இருக்கும், 'டைஸ்' பயன்படுத்தி, அதில் வரும் எண்களுக்கு ஏற்ப, போர்டில் காய்களை நகர்த்த வேண்டும்.குறிப்பிட்ட பாயின்ட்ஸ் வந்ததும், டிசைன் கார்டு எடுத்து, ஒரு டிசைனை உருவாக்க வேண்டும்.டிசைன் கார்டில் உள்ள டிசைன் போர்டில், எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.


இப்படி எட்டு பாயின்ட் வரை பெற்றால் வெற்றி கிடைக்கும்.இறுதியில், போர்டில் காஞ்சி பட்டுச் சேலைகளில் இருக்கும் டிசைன் வரும். இந்த கேமை அதிகாரப்பூர்வமாக, மே மாதம் அறிமுகம் செய்கிறேன். முன்பதிவு செய்ய விரும்புவோர், info@mad4fungames.comக்கு மெயில் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் தகவல் அறிய www.mad4fungames.com


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement