ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை கோரி மனு
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான தேதிகளை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர், எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும், சட்டசபையின் பதவி காலம் முடிந்த பின் தான், தேர்தல் நடத்தப்பட வேண்டும். முன் கூட்டியே தேர்தல் நடத்த, தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும்.ஜனாதிபதி போல், பிரதமரும் பொதுவானவர் தான். எனவே அவர், எந்த கட்சி சார்பாகவும், தேர்தலில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
வாசகர் கருத்து (17)
பிரதமர் பிரச்சாரத்துக்கு போக கூடாதுன்னு மட்டும் தடை வாங்க வழக்கு போட்டால் செல்லுபடியாகாது. அதனாலே வேறே எதையாவது சேர்த்து போடனும்னு சர்மா செஞ்சு இருக்காரு. என்னத்த சொல்லறது, இப்பவெல்லாம் பல்ப் வியாபாரம் நிறையா நடக்குது
கட்சி உறுப்பினராக இருந்தால்தான் கட்சி சின்னத்தில் போட்டியிடமுடியும் என்பது தேர்தல் விதி.
பைப்பில் தண்ணி வரலேனா தமிழின துரோகி மோடிதான் காரணம்னு டிவி விவாதங்கள் நடக்கவில்லையா ? இதுதான் டா தமிழ்நாட்டின் அறிவு முதிர்ச்சி. பரியாம இருக்காதே டா ராமா.
கொஞ்சம் நீங்க ஆளுகின்ற உபி வர போய் பார்த்துட்டு வாங்க உங்களுக்கு அறிவு வளர்ச்சின்னா என்னன்னு புரியும் ...
காலம் முடியுமுன் தேத்தல் நடந்தால்தான் இடைவெளி இல்லாமல் சபை அமைக்க முடியும்.இதுவரை வழக்கு போடாத இவன் காங்கிரஸ் கைக்கூலி
எவனாவது எதை செய்தாலும் அதற்கு காரணம் காங்கிரெஸ்ஸா ?
தேவையின்றி, எதையம் செய்வது , அழிந்து போவோம் என்று நினைக்கும் சக்திகளே.
ராமன், ML Sharma வின் முழுப்பெயர் Manohar Lal Sharma ..... இவர் ஒரு வழக்கறிஞர் ... பொதுநல வழக்குகளை போடுவதில் அனுபவசாலி (வழக்குகள் வெற்றி கண்டனவா என்பது வேறு விஷயம்) ....... இவருடைய கடந்தகால வழக்குகளை அறிந்தாலும், அவருடைய, வெளிப்படையாக அவராலேயே சொல்லப்பட்ட அரசியல் சார்பை கண்டாலும், அவர் காங்கிரஸ் கார என்பது புலப்படும் .......... இவர் சாதாரணமா இந்த மாதிரி அறிவிலித்தனமான வழக்குகளை போடமாட்டார் ....... ஏன் இதை போட்டார் என்று தெரியவில்லை ...........
திரு சர்மா அவர்களே பிரதம மந்திரி ஒரு கட்சி சார்பில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ப்ரெசிடெண்ட் அப்படியல்ல பிரதம மந்திரிபோல் மற்ற மந்திரிகளும் பொதுவானவர்கள்தான். அப்ப மற்ற மந்திரிகளும் பிரச்சாரம் செய்யக்கூடாதா.