dinamalar telegram
Advertisement

அமைச்சருடன் ரகசிய ‛டீலா? துரைமுருகன் மீது ஸ்டாலின் கோபம்

Share
மார்ச் 1, ஸ்டாலின் பிறந்த நாள். தொண்டர்களும், நிர்வாகிகளும் அறிவாலயம் வந்து வரிசையாக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். கட்சியின் எல்லா எம்.பி.,க்களும் ஆஜராகி வாழ்த்துச் சொன்ன போது, ஒருவர் மட்டும், 'ஆப்சென்ட்'. அவர் வேலுார் தொகுதியின் கதிர் ஆனந்த். பொதுச்செயலர் துரைமுருகனின் வாரிசு.'ஏன் வரவில்லை' என்று விசாரித்தால் பரபரப்பாக கதை சொல்கின்றனர்.

ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,கே.சி.வீரமணி அமைச்சராக இருக்கிறார். வன்னியர் என்ற முறையில் வீரமணிக்கும், துரைமுருகனுக்கும் வெகு காலமாக ஒரு எழுதப்படாத உடன்படிக்கை உண்டு. அதாவது -ஜோலார்பேட்டையில் வீரமணி ஜெயிக்க துரை உதவி செய்வார். காட்பாடியில் துரை வெற்றி பெற, வீரமணி உதவுவார். இரண்டும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள்.

இந்த தேர்தலுக்கும் ரகசிய உடன்பாடு தொடர்வதாக, இரு கட்சியிலும் உள்ளூரில் புகைச்சல். அதன் வெளிப்பாடாக நடந்த விஷயம் தான், அறிவாலயத்தில் இப்போது, 'டாப்' கிசுகிசு. ஜோலார்பேட்டை ஒன்றியத்தில், தி.மு.க., கிளைகளை அதிகமாக உருவாக்கியவர், ஒன்றிய செயலர் உமா. கூத்தாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். அவர் இப்படி வேகமாக வேலை பார்ப்பது, அமைச்சருக்கு இடைஞ்சலாக இருந்தது. துரைக்கு, 'மெசேஜ்' அனுப்புகிறார். உடனே அறிவாலயத்துக்கு உமா பற்றி தவறான தகவல் தெரிவிக்கப் பட்டு, அவர் பதவி பறிக்கப்படுகிறது. முரசொலியில், அறிவிப்பு வருகிறது. அதை படித்து, திருப்பத்துார் மாவட்ட தி.மு.க.,வினர் கொதிப்பு. 'கட்சிக்காக வேகமாக வேலை செய்தால் தண்டனையா?' என்று.

உமாவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் ஒட்டப்பட்டி காந்தி. இவர் யார் என்றால், துரைமுருகனுக்கும் அவர் மகன் கதிர் ஆனந்துக்கும் வேண்டப்பட்ட கவிதா என்பவரின் அக்கா கணவர்.என்னதான் சென்னைக்கு எட்டாவிட்டாலும், உள்ளடி, 'பாலிடிக்ஸ்' எல்லாம் உள்ளூர் உ.பி.,க்களுக்கு தெரியாமலா போகும்? புகைச்சல் கடுப்பாக மாறி, ஸ்டாலினுக்கு புகார் போனது.

அவர் உமாவை வரச் சொன்னார். வந்தார். துரையும், கதிரும் வீரமணிக்காக தன்னை பலி கொடுத்து விட்டனர் என்றார். தந்தை - மகன் குறித்த வேறு சில விஷயங்களையும் போட்டு உடைத்தார்.ஸ்டாலின் அதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு தெரியாதா, 'சீனியர்'களின் சித்து விளையாட்டுகள். என்றாலும், உமா வேண்டியபடி விசாரணைக்கு உறுதி அளித்தார்.

வழக்கறிஞர் காந்தியை விசாரணை அதிகாரியாக ஜோலார்பேட்டைக்கு அனுப்பினார். உடன் பிறப்புகள் கொண்டுவந்து கொட்டினர் தகவல்களை. விலாவாரியாக அறிக்கை கொடுத்தார். அதை படித்ததும், ஸ்டாலினுக்கே கோபம் வந்துவிட்டது. திருப்பத்துார் மாவட்ட பொறுப்பாளர் ஆலங்காயம் தேவராஜனை அழைத்து விசாரித்தார். பூனை வெளியே குதித்து விட்டது என புரிந்து கொண்டார் தேவராஜன்.

ஜோலார்பேட்டையை மையமாக வைத்து கட்சியில் நடக்கும் மற்ற கூத்துகளையும் விவரித்து உள்ளார்.கண் சிவந்தார் தளபதி. துரைமுருகனை அழைத்து, 'என்ன இது?' என்று எகிறியிருக்கிறார். முத்தாய்ப்பாக, “கதிர் இனிமேல் வேலுார் எல்லை தாண்டக் கூடாது; வேலியும் தாண்ட வேண்டாம்,” என எச்சரித்துள்ளார்.

கூடவே, உமாவை மீண்டும் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலராக நியமித்து முரசொலியில் அறிவித்து விட்டார். இதுதான் கதிர் ஆனந்த், மார்ச் 1ல், மிஸ்ஸாக' காரணம்.என்றாலும் அப்பா - பிள்ளை அணியைவிட அதிகம், 'அப்செட்'டில் இருப்பவர் அமைச்சர் வீரமணியாம்.

'அப்பாவின் 'வெயிட்' தெரியவில்லை!'கடுமையான சளித் தொல்லை. ரொம்ப சிரமப்பட்டேன். அதனால் தான், தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல போக முடியவில்லை. உமாவை நீக்கியது, சேர்த்தது எல்லாமே தலைமை எடுத்த முடிவு. அதில், எனக்கோ, அப்பாவுக்கோ சம்மந்தம் இல்லை. கவிதாவை கட்சிக்காரர்கள் எல்லோரையும் போலத் தான் எங்களுக்குத் தெரியும். அவரை வைத்து அரசியல் செய்கிறோம் என்பது உண்மை இல்லை. தலைமை விசாரணை நடத்தியது குறித்து எதுவும் தெரியாது.
வீரமணியுடன் அப்பா ரகசிய ஒப்பந்தம் என்று சொல்வது அபத்தம். 60 ஆண்டு காலம், கலைஞரோடு அரசியல் செய்த அப்பாவை, ஒரு நுாலில் கட்டிப் போட முயற்சி செய்கின்றனர். அதெல்லாம் நடக்காது.ஜோலார்பேட்டையில் வீரமணியை தோற்கடிப்போம். ஜாதி அரசியல் செய்வதாக எங்கள் குடும்ப மரியாதையை குலைக்க யாருக்கும் உரிமையில்லை.
- கதிர் ஆனந்த், தி.மு.க.,- எம்.பி.,

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  எங்கள் குடும்ப மரியாதையை குலைக்க யாருக்கும் உரிமையில்லை....போன தேர்தலில் கட்டு கட்டா பணம் கண்டுபுடிச்சாங்களே . .அதநால் ஏற்பட்ட மதிப்பு குறைச்சித கூடாது என்கிறீர்களா?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  திமுக தன் குடும்ப மக்களுக்கான கட்சி. வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?? நல்ல, நேர்மையான, உழைக்கும் மக்களுக்கான கட்சி என்றால் பாஜக தான்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  இது தொன்று தொட்டு கழகங்களுக்கு அங் ஆங்கே நீடுகாலமாக நடக்கிறது. அதிசயமில்லை. அரசாங்க டெண்டர் விவகாரத்திலேயே ஆளுங் கட்சியில் ஒருவர் எடுப்பார். சப் கான்ட்ராக்ட் எதிர்க்கட்சி காரர் செய்வார். இதெல்லாம் சகஜெம்ப்பா.

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  இன்னமுமா இவனுங்களை நம்பனும்?? ஆமாம் இருநூறு ரூபாயும் குவாட்டரும் வேணுமில்ல

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  துரை முருகன் ஒரு சுயநலவாதி. அவர் திமு க வில் உயர் பதவியில் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு தலை வலியே.துரை முருகனுக்கு compulsory retirement கொடுத்தால் மட்டுமே ஸ்டாலின் நிம்மதியாக கட்சி நடத்தவும், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியும் செய்யமுடியும். இல்லாவிட்டால் இதே தலை வலிதான் தொடரும்.

Advertisement