dinamalar telegram
Advertisement

புதிய வாக்காளர்களுக்கு தபால் துறை மூலம் அடையாள அட்டை வழங்கல்

Share
Tamil News
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் 70 ஆயிரம் பேருக்கு, தபால் துறை மூலம் வீடு தேடிச் சென்று அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியது.

தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலையொட்டி, கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வரை, புதிய வாக்காளர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. அதையடுத்து, 2021ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய வாக்காளர்களுக்குதபால் துறை மூலம்உடனடியாக வழங்க,தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி,விரைவு தபாலில்கடலுார், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளுக்கு 53 ஆயிரம்; விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளுக்கு 17 ஆயிரம் என, 70 ஆயிரம் அடையாள அட்டைகளை தபால் துறைக்கு அனுப்பி வைத்தது.தபால் துறையினர்நேற்று முதல்வீடு தேடிச் சென்று வழங்கும் பணியை துவங்கினர்.வரும்8ம் தேதிக்குள் விநியோகிக்கும் இலக்குடன் பணிதுரிதப்படுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement