dinamalar telegram
Advertisement

முடக்கம்! மதுரையில் 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத நிலையில் ....ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம்

Share
Tamil News
மதுரை : தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் திறக்கப்படாமலேயே இரண்டாண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

தமிழ்நாடு புதுமை திட்டத்தின் கீழ் 2015 - 16ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் மதுரையில் இம்மையம் உருவாக்க திட்டமிடப்பட்டது. சட்டசபையில் 110 விதியின் கீழ் மையத்திற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டுமெனில் அறிவியல் சார்ந்த விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும். ஒரு வீரரின் உடல்திறன், எலும்புகள் வளர்ச்சி ஆகியவற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, எந்த விளையாட்டில் வீரர் சிறந்து விளங்குவார் என்பதை துறை ரீதியாக கண்டறிந்து சர்வதேச அளவில் ஜொலிக்க வைக்கலாம்.

வீரர்கள் சிறியளவில் அடிபடும் போது முறையான சிகிச்சையின்றி சிலநேரங்களில் அவர்களது எதிர்கால விளையாட்டு வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. அடிபடும் வீரர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளித்து பிசியோதெரபியும் தரமுடியும். இதன்மூலம் வீரர்களை தக்கவைத்து போட்டிகளில் ஜெயிக்க முடியும்.ஊக்கமருந்துகள் பயன்படுத்தாமல் விளையாட்டு களை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மொத்தத்தில் விளையாட்டு துறையை அறிவியல் துறையுடன் இணைத்து ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதே இந்த அறிவியல் விளையாட்டு மையத்தின் நோக்கம்.

ஜெயலலிதாவின் கனவு திட்டமான இம்மையம் முதன்முதலில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.3 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு காட்சிப்பொருளாக நிற்கிறது. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிதி ஒதுக்கியுள்ளதால் இதற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டியதில்லை. விளையாட்டுக்கான உபகரணங்கள், பிசியோதெரபி சிகிச்சைக்கான கருவிகள், துறைசார்ந்த வல்லுனர்களை நியமித்தால் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    பேசாம இதையே எய்ம்சாக மாத்தி தொறந்துடலாமே... பெரியவரும் எலக்ஷனுக்கு முன் வந்து திறந்து வெச்சு நல்ல பேர் வாங்கலாம்.

Advertisement