புதுச்சேரி- தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வரலாற்றை நாணவியல் வாயிலாக உயர்த்தி காட்டிய அறிஞர் என புதுச்சேரியில் நடந்த மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மறைந்த தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவையொட்டி புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கதிர்காமத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமையில் நிர்வாகிகள் தினமலர் ஆசிரியர் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.காந்தி நகர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் ராகவன், பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் ஜெயபால், ரமேஷ்பாபு, நடராஜன், இளைய பெருமாள், கருணாகரன், தன்ராஜ், உதயகுமார் மலரஞ்சலி செலுத்தினர்.பேராசிரியர் விசாலாட்சி, கவிஞர்கள் செல்வதுரை நீஸ், பூஞ்சோலை, செங்குட்டுவன், சரஸ்வதி, சசிகுமார், கணேஷ், வீரதமிழரசி வேலு நாச்சியார் அமைப்பினர் தலைவர் கலைவரதன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிதாசன் அறக்கட்டளை தலைவரும், பாரதிதாசன் பேரனுமான பாரதி பேசியதாவது:இக்கட்டான காலக் கட்டங்களை தனது நுட்பத்தால் கடந்து மக்கள் விரும்பும் ஒப்பற்ற இதழாக தினமலர் நாளிதழை ஆசிரியர் கொண்டு வந்தார்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கத்துடன் செயல்பட்ட அவரின் தேசிய பார்வையும், மக்கள் முன்னேற்ற சிந்தனையும் அறிஞர்களால் பாராட்டப்பட்டது.
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வரலாற்றை நாணயவியல் வாயிலாக உயர்த்தி காட்டிய அறிஞர். பல்வேறு சீர்திருத்தங்களை செய்த பன்முறை அறிஞர்.இவ்வாறு அவர் பேசினார்.மறைந்த தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!