dinamalar telegram
Advertisement

காடுவெட்டி மனைவி சுயேச்சையாக போட்டி?

Share
Tamil News
அரியலுார் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு. வன்னியர் சங்க தலைவராக இருந்த இவர், 2018 ல் உடல் நலக்குறைவால் இறந்தார். பிறகு ராமதாசுக்கும், குரு குடும்பத்துக்கும் ஆகவில்லை.


குருவின் மகன் கனலரசன், தன் அப்பாவின் ஆதரவாளர்களுடன், 'மாவீரன் மஞ்சள் படை' என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி, செயல்பட்டு வருகிறார். அவர், உதயநிதியை சந்தித்தார். 'தேர்தலில், தி.மு.க.,வுக்கு மாவீரன் மஞ்சள் படை பிரசாரம் செய்யும்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கண்டிராதித்தம் கிராமத்தில் மஞ்சள் படை கொடியை ஏற்றச் சென்றபோது, கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக போலீசார் கனலரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பா.ம.க., வின் துாண்டுதலே காரணம் என குருவின் மனைவி லதா குற்றம் சாட்டினார். கனலரசன் கைதுக்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதனால், விரக்தி அடைந்த குரு குடும்பத்தினர், ஜெயங்கொண்டம் தொகுதியில் லதாவை சுயேச்சையாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். அவர் வன்னியர் சமூக முக்கியஸ்தர்கள், குருவின் ஆதரவாளர்கள், அனுதாபிகளை சந்தித்து, சால்வை அணிவித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால், பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement