dinamalar telegram
Advertisement

முகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்

Share
சென்னை: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை விடுத்துள்ளது.
அதாவது, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Visu Iyer - chennai,இந்தியா

    ஆன்லைன் தேர்தல் வாக்கு பதிவு முறை வருமா என கேட்கிறீர்களா இந்தியா முழுவதும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு.. ஆன்லைன் தேர்தல் வரும்.. என்று எதிர்பாருங்கள்..

  • Visu Iyer - chennai,இந்தியா

    ஆன்லைனில் ஆப் வழியாக வாக்கு பதியலாம்... வாக்கு பதிந்தவுடன் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும் அதை பதிவு செய்தால் வாக்கு பதிவாகிவிடும்.. நீங்கள் எந்த கட்சிக்கு வாக்கு பதிந்தீர்கள் என்று உங்களுக்கு குறுஞ்செய்தி confirm செய்து வந்து விடும்.. இப்படி ஒரு முறையை இந்த மத்திய அரசு கொண்டு வருமா...?

  • Visu Iyer - chennai,இந்தியா

    இதற்கு பதிலாக ஆன்லைனில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆப் போடும் மத்திய அரசு.. வாக்கு பதிய ஒரு ஆப் போட்டால் தான் என்ன.. வாக்கு பதிவாவது நேர்மையாக நடக்கும் தானே

  • Visu Iyer - chennai,இந்தியா

    தம்மா துண்டு துணி கொரானாவை விரட்டும் என்றால் சரி.. ஊழல் காட்சிகளை விரட்ட என்ன செய்ய வேண்டும்.. ஊழல் காட்சிகளை தேர்வு செய்யவா முக கவசம் என்று பலரும் போகாமல் இருந்தால் எப்படி வாக்கு பதிவாகும்...

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    வாக்கு அளிக்கும் போதாவது முகக்கவசம் எடுத்து முகத்தை காட்டவேண்டும். இல்லையென்றால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.

Advertisement