இது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது?
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திராவிட அரசியல்வாதிகள், காழ்ப்புணர்ச்சியால் ஆத்திரத்தில் அறிவிழந்து, ஒரு அடிப்படை விபரத்தைக் கூட சரிபார்க்காமல், கருத்து சொல்வது வாடிக்கை; வேடிக்கையான விஷயமும் கூட.
இந்த விபரம் அறியாத திராவிட அரசியல்வாதிகள், இதற்கு மத்திய அரசு தான் காரணம் என, பொங்கி எழுந்துள்ளனர். அதாவது, உச்சிக் குடுமி என்பது, அந்தணர் குறியீடாம். 'திருவள்ளூவருக்கு எப்படி பார்ப்பனச் சாயம் பூசலாம்' என்பது தான், அவர்களின் ஆத்திரத்துக்கு காரணம்.
எதையும் பேசுவதற்கு முன்னால், தீர ஆராய வேண்டும்; கண்மூடித்தனமாக குறை கூறுவது முட்டாள்தனம். ஈ.வெ.ரா., வழி வந்த திராவிடக் கட்சிக்காரர்கள், திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடுவதே கொடுமை. திருவள்ளுவர், 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் எப்படி இருந்தார் என, யாருக்கும் தெரியாது. குடுமி, தாடி, காவி துண்டு, திருநீறு, பூணுால் என்ற அடையாளத்தோடு இருந்தோ இல்லாமலோ, அவர் வாழ்ந்திருக்கலாம்; அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அதுவா முக்கியம்? உலகமே வியந்து போற்றும், அவரது குறள் தானே முக்கியம்!
ஆங்கில இலக்கியம், 'எழுதியவரை நினைக்காதே; எழுதியதை மனதில் வை' என்கிறது. எழுத்தாளன் மரணம் அடைவான்; அவன் எழுத்துக்கள் மறையாது. இதன்படி பார்த்தால், நாம், திருவள்ளுவரை விட திருக்குறளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.ஆனால், நம்மூர் மேதாவிகள், வள்ளுவரின் தோற்றம் பற்றித் தான் அதிகம் சிந்திக்கின்றனர்.

வெறும் நுனிப்புல் மேயும் இந்த திராவிட அரசியல்வாதிகள், திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஹிந்து கடவுள்கள் பற்றிய கருத்துக்களை அறிவரா? மும்மூர்த்திகளைப் பற்றிய குறிப்பும், வேதம் மற்றும் உபநிஷத் பற்றிய குறிப்பும், குறளில் உள்ளது என, சான்றோர் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனிதனையும் கடிச்ச கதை மாதிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்த விவகாரத்தில், பரிமேலழகரையும் சாடியிருக்கிறார்.
திருக்குறள் உரையில், பரிமேலழகர், தன் ஆரியக் கருத்துகளையும் திணித்துள்ளார் என்கிறார். இருக்கட்டுமே; அதிலென்ன தப்பு? ஒரு பாடலுக்கு, பலர் உரை எழுதியிருந்தால், எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. அவரவர் கண்ணோட்டத்தில் படித்து, எழுதியிருப்பர். வைகோவும், அவர் பாணியில், திருக்குறளுக்கு ஓர் உரை எழுதட்டுமே... யார் தடுத்தது?
வாசகர் கருத்து (72)
விரைவில் வை கோ அவர்கள் எழுதிய திருக்குறள் உரை நமக்கு கிடக்கும் .
திருக்குறளில் வடமொழி: இது தவறே அல்ல..எண்ணங்கள் அகண்ட பாரதத்தில் ஒன்றாக தான் இருந்தது. மொழி தடையே இல்லை. கீழ்க்கண்ட குரல்கள் வெறும் ஒரு சில உதாரணம்தான்: ======================================== தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (தவம் - 266) === தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. == Sankrit words used: தவம் (தபஸ்), கருமம் (கர்மா), அவம் ========================================= வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (வான் சிறப்பு -11) === மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். == Sankrit words used: அமிழ்தம் (அம்ருதம்) ============================================= சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. === மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது நாள் வழிபாடும் நடைபெறாது. == Sankrit words used: பூசனை (பூஜா) தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். (வான் சிறப்பு -19) === மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். == Sankrit words used: தானம் , தவம் =============================================== சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி === முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். == Sankrit words used: சமன் (சமம்) =============================================== ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.(நீத்தார் பெருமை -25) === ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். == Sankrit words used: கோமான், இந்திரன் =================================================
இவனுக்கு கால்டுவெல் போன்றவர்களை தூக்கி பிடித்து கொண்டு இருப்பது தான் முழுநேர வேலை போல
வைகோவையும் ஒரு மனிதராக மதித்து நீங்கள் கடிதம் எழுதியதே தப்பு. வைகோ திமுகாவில் இருந்து வெளியில் வந்ததற்கு காரணமே ஸ்டாலினை முதல்வர் ஆக்க பார்க்கிறார் முக என்பதுதான். ஆனால் தற்போது வைகோ ஸ்டாலினை முதல்வராக பார்க்க துடிக்கிறார். ஏன்? வெட்கம் கேட்டு ஸ்டாலின் தலைமையில் கூட்டு வைக்க ஆர்வம் காட்டுகிறார். ஏன்? இவர் எல்லாம் ஒரு மனிதரா? நேற்று பேசியதை மாற்றி, மறுத்து இன்று பேசுகிறார். நல்ல குரல்வளம் உள்ளது என்பதால் இவர் பேசுவதெல்லாம் சரி என்று ஆகி விடுமா? பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அதில் இதுவும் ஒன்றா?
பறிபோலழகர் என்ற தமிழ் பெயர் வைத்தவர் ஆரியர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று பெயர் வைத்தவர்கள் தமிழர்களா? இதை நம்புபவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதி.