dinamalar telegram
Advertisement

தேனிமாவட்ட எல்லையில் சுகாதாரத்துறை பரிசோதனை அவசியம் இடுக்கியில் கொரோனா பரவுவதால் நடவடிக்கை தேவை

Share
Tamil News
கூடலுார்: கேரளா இடுக்கிமாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்ட எல்லையான குமுளி, கம்ப மெட்டு, போடி மெட்டில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு விவசாயப் பணிகளுக்காக குமுளி, கம்ப மெட்டு, போடி மெட்டு வழியாக காலையில்சென்று மாலையில் திரும்புகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு, கெடுபிடிகள் முழுவதும் தளர்த்தப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்தும் அதிகம் வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக முழுவதும் தளர்வு ஏற்படுத்தி எவ்வித பரிசோதனையும் இன்றி எல்லையை கடந்து செல்கின்றனர். மீண்டும் பரவுகிறதுஇந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்றுக்கு மீண்டும் ஒரு நாளுக்கு 200 பேர் வரை உறுதி செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால் இடுக்கிமாவட்டஎல்லைப்பகுதியில் இருந்து தமிழகப்பகுதிக்குள் வந்தவுடன் முகக்கவசத்தை மறந்து விடுகின்றனர்.

முகக்கவசம் அணிவதை மட்டும் கண்காணித்து வரும் கேரள சுகாதாரத்துறையும் மற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதனால் இடுக்கியில் இருந்து வருவோரல் மீண்டும் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது அவசியமாகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement