dinamalar telegram
Advertisement

பாம்பன் முதல் தூத்துக்குடி தேசிய கடல் பூங்காவாக அறிவிப்பு

Share
Tamil News
ராமநாதபுரம் மாவட்டம்ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை கடலில் 21 மன்னார் வளைகுடா தீவுகள்உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல்ஆமைகள் உள்ளிட்ட 450 வகை அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

மேலும் மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி வளரும் பவளப்பாறைகள்கடல்அரிப்பை தடுத்து தீவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இத்தீவுகளை தேசியகடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தீவுகளில் மீனவர்கள், வெளிநபர்கள்தங்கவோ, மீன்பிடிக்கவோவனத்துறை தடை விதித்தது.அதேசமயம் 21 தீவுகளில் கடல் வாழ் உயிரினங்கள் குருசடை தீவில் உள்ளதால், இத்தீவுக்குள் உயிரியியல் ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது. இங்கு வனத்துறை அனுமதியுடன் உயிரியியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.அரியவகை உயிரினங்கள்பாதுகாப்பு கருதி அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்டது.இதற்கிடையில் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு சவாரி திட்டம் தொடங்க வனத்துறை மூலம் ரூ. 30 லட்சம் செலவில் கண்ணாடி இழை படகுகள் வாங்கப்பட்டன. இவற்றை நிறுத்த குந்துகால் கடற்கரையில் மரப்பலகையில் பாலம் அமைத்தனர். படகு சுற்றுலாவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது. படகுகள், மரப்பாலம் சேதமடைந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சுற்றுலா பயணிகள்வருகை அதிகரிக்கும். குந்துகால் கடலோரத்தில் கடல்சார் உணவு மையம் நடத்த மகளிர் குழுவுக்கு அனுமதி வழங்கினால் மீனவர்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்நிலையில் கிடப்பிலுள்ள குருசடைத்தீவு படகு சவாரி சுற்றுலா திட்டத்தை அமல்படுத்த மாவட்ட வனத்துறையினர்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட வன உயிரினகாப்பாளர் மாரிமுத்து கூறுகையில், 'குருசடை தீவு சுற்றுலா திட்டத்திற்கு அரசின் அனுமதிபெற முயற்சி செய்துள்ளோம். அங்கு மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில், சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இந்தாண்டில் குருசடை தீவு சுற்றுலா படகு திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement