மாணவியை கடத்திய வாலிபர்
காட்டுமன்னார்கோவில்: கல்லுாரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர், பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். பூவிருந்தநல்லுாரை சேர்ந்த சாம்பசிவம் மகன் கார்த்திகேயன்,25. ஐ.டி.ஐ., படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். கல்லுாரி மாணவியும், கார்த்திகேயனும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவியை காணவில்லை. பெற்றோர் விசாரித்ததில், கார்த்திகேயன் கடத்தி சென்றது தெரிய வந்தது.புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கார்த்திகேயனை கைது செய்து, சிறையில்அடைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!