dinamalar telegram
Advertisement

சேதம்:  ஒரு நாள் மழைக்கு 2,000 ஏக்கர் பயிர்கள்... அடுத்தடுத்த பாதிப்பால் விவசாயிகள் கவலை

Share
Tamil News
கடலுார்; 'நிவர்', 'புரெவி' புயல் பாதிப்பை தொடர்ந்து, ஒரே நாளில் கொட்டி தீர்த்த கடும் மழையால், கடலுார்மாவட்டத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் எள், உளுந்து, மணிலா என, 2 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள்சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை துவங்கி பகல் 10:00 மணி வரையில், வரலாறு காணாத மழை பெய்தது. கடலுாரில் 24 மணி நேர நிலவரப்படி 30 செ.மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 162 செ.மீட்டர் மழை பதிவாகியது. இது, 90 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பேய்மழையாகும்.மழையால், கடலுார் நகர சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்தது, தாழ்வான நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மாவட்டத்தில் அறுவடை செய்ய முடியாமல் இருந்த நெற்பயிர் வயல்கள் குளமாக மாறி பாதிக்கப்பட்டது.சிதம்பரம், பெண்ணாடம், திட்டக்குடி, கடலுார் என, பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியது.மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 ஏக்கருக்கும் அதிகமான நெல் மற்றும் பயிறு வகை பயிர்கள், காய்கறி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.தோட்டபயிர்கள் நாசம்:

சம்பா பருவ நெல் அறுவடைக்கு பின் பண்ருட்டி, கடலுார், விருத்தாசலம், புதுச்சத்திரம், குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் அதிகளவில் கத்தரி, வெண்டை, மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 2,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.அவைகள் தண்ணீர் சூழ்ந்து சேதமாகியுள்ளது.மேலும் சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மற்றும் வடலுார் சுற்றுப்பகுதிகள், வெள்ளப்பாக்கம், மருதாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணிலா, எள், உளுந்து சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி குளமாக மாறியதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.ஏற்கனவே, 'நிவர்' புயலால் கடந்த நவ., 24ம் தேதி துவங்கி, 26ம் வரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்ட விவசாயிகள், தற்போது பருவம் தவறி பெய்த கனமழை என, தொடர்ந்து ஏற்படும் பாதிப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    வேளாண் மசோதாப்படி எங்கே அதிக விலை கிடைக்குதோ அங்கே வித்துக்கலாம். பிரதமர், முதல்வர், குடியரசு தலைவர், தோமர், நிதியமைச்சர் இவிங்களுக்கு ஆளுக்கு ஒரு லோடு அனுப்புங்க. நல்ல விலை குடுத்து வாங்கிப்பாங்க. நீங்களும் ஆடி கார் வாங்கலாம்.

Advertisement