dinamalar telegram
Advertisement

மந்தரவாதி இல்லை; செயல்வாதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Share
Tamil News
ஆத்துார் :''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்வது போல் நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, செல்லியம்பாளையத்தில் நேற்று, அ.தி.மு.க., மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து, பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம்.

கட்டப்பஞ்சாயத்துஇதை கூட தடுக்க ஸ்டாலின் முயற்சித்தார். மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.ஸ்டாலினின் சாயம் தற்போது வெளுத்து விட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாதவர் ஸ்டாலின். அவர், நாட்டில் என்ன நடக்குது என்பதே தெரியாமல் இருக்கிறார்.

குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் கூறுவது போல், நான் மந்திரவாதியாக இருந்திருந்தால், அவர் பேசியிருக்கவே மாட்டார். நான் மந்திரவாதி அல்ல; தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி நான். தப்பு செய்தவரை தட்டிக்கேட்டால் தான் தலைவன்; தட்டிக் கேட்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழகத்திற்கு தேவையா என, மக்கள் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இன்னும் நிறைய அறிவிப்புநாமக்கல் மாவட்டம், கபிலர்மலையில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நீர் மேலாண்மை திட்டத்திற்காக, தமிழகம் தேசிய விருது பெற்றுள்ளது.

உள்ளாட்சி துறையில், 143 விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். கொரோனா காலம், கடந்த தைப்பொங்கல், இந்தாண்டு பொங்கல் என மக்களுக்கு, 4,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் நிறைய அறிவிப்புகள் வெளிவரும். பொதுமக்களின் மனம் குளிர, மனம் மகிழ அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும்.இவ்வாறு, அவர் பேசினார்.

திருப்பதி கோவில் அடிக்கல்திருமலை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், அஜிஸ் நகர் ரவுண்டானா அருகில், தனக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தை, தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கியுள்ளார். இங்கு, ஏழுலையாமன் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.


முதல்வர் இ.பி.எஸ்., காலை, 10:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு நடந்த யாகசாலை பூஜையிலும் பங்கேற்றார்.தொடர்ந்து, ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்து. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (15 + 13)

 • vsraj - COIMBATORE,இந்தியா

  பொதுவாக பார்க்கும்போது மக்களை கவர்ந்துவிட்டார் EPS.

 • periasamy - Doha,கத்தார்

  நீங்கள் எப்படி நாலு பாய்ச்சலில் தவழ்ந்து எப்படி உழைத்து இந்த முதல்வர் பதவியை பெற்றாய் அதைக் காப்பாற்ற மத்திய பாஜாகாவிடம் தமிழக உரிமை அனைத்தையும் இழந்து உங்கள் பதவியை காப்பாற்றினாய் எல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள் பழனிச்சாமி அவர்களே இனி மக்களின் தீர்ப்புக்கு காக காத்திருக்கும் குற்றவாளிதான் நீங்கள்

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   கூனி குறுகி ..குந்தி தவழ்ந்து படுத்து ஊர்ந்து உழைத்த காணொளி படமாக திரையிடப்பட இருக்கிறது .. கவலைப்படவேண்டாம் பழனிசாமி அவர்களே .. ஜூன் மாதத்தில் முன்னாள் முதல்வர் என்று கொஞ்சகாலம் சொல்வார்கள்

  • sankar - Nellai,இந்தியா

   உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு

 • RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ

  தமிழகத்துக்கான உரிமையைப் பறிகொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறிபோனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறிபோனது. புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது. மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதிவரத்து குறைந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால், தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை.

  • Srinivas - Chennai,இந்தியா

   அதற்காகத்தான் இந்த இரண்டு அடிமைகொள்ளைக்கூட்டத்தை விரட்ட தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர். பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலையை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிக்கிறானுங்க..கொஞ்சம்கூட இரக்கமில்லாத கொடூர கும்பல்கள்....

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை ..தமிழக மின்வாரியத்தில் வடமாநிலத்தினர் பணிபுரிய சட்டம் இயற்றியது .. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் இந்தி மொழி பேசுபவர்களை பணியமர்த்தியது . கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாமலிருந்தால் இந்நேரம் இந்தி தெரிந்தால் மட்டுமே தமிழகத்தில் வேலை என்ற நிலையம் . ஏன் ஆட்சி மொழியாக கூட ஆகியிருக்கும் .. இப்போது தமிழகம் காக்கப்பட இவர்களை துடைத்தெறிய மக்கள் விளைவது வெளிப்படை .. இனி இவர்கள் தொடர்ந்தால் ஒரே நாடாகி காடாகவே வாய்ப்பு ..மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதும் .மென்மேலும் விலை வளர்ச்சி பெறுவதும் இவர்களின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தும்

 • வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ

  மாறிமாறி தோளில் சுமக்க தி மு க , அல்லது அ தி மு க தேவை

 • வெற்றிக்கொடி கட்டு. - கழக பாசறை தொண்டன் ,இந்தியா

  பழனி செயல்வதி நீ நடத்துனயே ஒரு விழா அதற்க்கு கர்நாடக காரன் எதிப்பு அப்புறம் எப்படி நடக்கும் நீயும் தெரிந்தே இப்படி தில்லாலங்கடி வேலை செய்கிற , ஆமாம் அந்த AIIMS என்று சொல்லுகிறார்களே அது என்ன வருமா இல்லை வரும் ஆனா வராது மாதிரியா , ஒரு வேலை ஸ்டாலின் வந்து தான் செய்யணுமா என்ன

Home " நான் மந்திரவாதி அல்ல,செயல்வாதி" - முதல்வர் பழனிசாமி (13)

 • ஆப்பு -

  இவுரு மந்திரவாதி மந்திரிதான். விதி 110 ஐ வெச்சு லட்சம் கோடிக்கணக்குல பணதை எடுத்து அள்ளி உடறாரே... வேறு யாரால முடியும்?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  அம்மா இருந்தபோதும் அம்மா புராணம் பாடி பதவிசுகம் கண்ட இவர்கள், அம்மா இறந்த பின்னும் அம்மா புராணம் பாடியே ஆட்சியை பிடிக்க புதிய உத்தி.

 • sankar - Nellai,இந்தியா

  சொல்லுக்கு சொல் செருப்படி - சபாஷ் வாத்யாரே

 • Srinivas - Chennai,இந்தியா

  மந்திரவாதி இல்லதான்...கிளி ஜோஸ்யம் பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கானுங்க...

 • Girija - Chennai,இந்தியா

  "சொல்லி கொடுத்ததையும் தயாரிப்பு கோளாறு ரோபோ போல் தவறாக பேசும் ஸ்டாலின்" என்று நச்சுனு அடிப்பதைவிட்டு ? என்ன ஈ பி எஸ் ? உங்க பிரசார பாசறையில் சேர நான் ரெடி . manufacturing diffect

 • vbs manian - hyderabad,இந்தியா

  ஆட்சி திரும்பி வர வேண்டுமென்றால் இவர் மந்திர வாதியாக மாற வேண்டும்.

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  இதோ இப்படித்தான் ஒரு பொறுப்பில் இருப்பவர் பேசவேண்டும். சுடலைக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா என்ன? ஒரே கனவுலகத்தில மிதக்குறார். முதல்வரின் பேச்சில் ஒரு யதார்த்தம் இருக்கின்ற்து. பந்தா இல்லை..வேஷமில்லை..துவேஷமுமில்லை..மக்கள் முதல்வராகவே மிளிர்கின்றார். நல்ல மனுஷன் நம்ம மக்கள் முதல்வர்.

  • Srinivas - Chennai,இந்தியா

   பேச்சில் யாதார்தம் இருக்கிறதாம்...

 • dina - chennai,இந்தியா

  ஸ்டாலின் சொல்வதையும் கேட்கமாட்டான் சுயமாகவும் செயல் படத்தெரியது என்னதான் செய்வது தமிழ்நாடு மக்கள் தான் சொல்லவேண்டும்'.

 • Girija - Chennai,இந்தியா

  "சொல்லி கொடுத்ததையும் தயாரிப்பு கோளாறு ரோபோ போல் தவறாக பேசும் ஸ்டாலின்" என்று நச்சுனு அடிப்பதைவிட்டு ? என்ன ஈ பி எஸ் ? உங்க பிரசார பாசறையில் சேர நான் ரெடி . manufacturing diffect

 • Siva - Aruvankadu,இந்தியா

  மூன்று மாதங்கள் கழித்து செய்திகள் வருமா என்று தெரியவில்லை... ஸ்டாலின் மனு பேப்பர் எடைக்கு போட்டு ஆயிரம் கோடி சம்பாதித்தார்... நிச்சயம் செய்வார். சாதிப்பார்.. திமுக வரலாறு அப்படித்தான் இருக்கிறது.

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

   அதிலயும்.... ஐந்நூறு கோடி ப்ளாக்கில் மீதி தான் ஒயிட்....

Advertisement