dinamalar telegram
Advertisement

இதயம் இனித்தது; கண்கள் பனித்தன: பா.ஜ.,வுக்கு அழகிரி டாட்டா

Share
Tamil News
டில்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, மூன்று நாளாக சென்னையில் தங்கி இருக்கிறார், மு.க.அழகிரி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, அழகிரி டில்லி செல்வதாக இருந்தார். திடீரென அது ரத்தாகி விட்டது. என்ன, ஏது என விசாரித்தால், வழக்கத்துக்கு மாறாக மவுனமாக இருக்கிறார்.


'ஸ்டாலினை இந்த தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவேன்' என, சபதம் போட்டவர், இப்படி அமைதியாகி விட்டாரே, என்ன விஷயம் என, அறிவாலயத்தில் விசாரித்தோம். அங்குள்ள நிர்வாகிகள் நேராக விஷயத்துக்கு வராமல், வாயெல்லாம் பல்லாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 'இப்ப மட்டும் இல்லைங்க.. இந்த தேர்தல் முடியுற வரைக்கும், அண்ணன் அப்டி தான் அமைதியா இருப்பார்' என, புதிராக பேசினார் ஒரு நிர்வாகி.


அண்ணனுக்கும், தம்பிக்கும் ஆகாது என்பதால், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை துாக்கி நிறுத்த, பிரசார திட்டம் ஒன்றை தயார் செய்திருந்தது, பாரதிய ஜனதா கட்சி. ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள, தி.மு.க.,வினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, அழகிரி தலைமையில் தேர்தல் பணிகளை முடுக்கி விட, சில செயல் திட்டங்களையும் தமிழக பா.ஜ., வகுத்திருந்தது.


ஆரவாரமாக அழகிரி பிரசார பயணம் துவங்குவதற்கு முன், ஒரு நடை டில்லி சென்று அமித் ஷாவை சந்திக்கவும் ஏற்பாடாகி இருந்தது. 20ம் தேதி, மதுரையில் இருந்து காரில், சென்னை வந்தார் அழகிரி. தேனாம்பேட்டையில் உள்ள, ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் வீட்டு திருமணத்துக்காக அண்ணன் சென்னை வந்துள்ளார் என, ஒரு காரணத்தை சுற்ற விட்டனர்.

எந்த தேதி என அழகிரி சொன்னதும், அவரோடு டில்லி செல்ல, பா.ஜ.,வின் கமலாலயத்திலும் தயாராக இருந்தது ஒரு டீம். திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் பெங்களூரில் இருந்து சென்னை வந்த கருணாநிதி மகள் செல்வி, நேராக அண்ணன் முன் போய் நின்றார். இருவருமாக அம்மாவை பார்க்க கோபாலபுரம் சென்றனர். அங்கே நலம் விசாரிப்பு முடிந்ததும், 'பஞ்சாயத்து'
துவங்கி இருக்கிறது.


ஸ்டாலின் நேரில் வந்தாரா, வீடியோ காலில் வந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவரும் அண்ணனிடம் சில வார்த்தைகள் பேசினார் என்கிறது அறிவாலய வட்டாரம். கட்சியில் மீண்டும் சேர்ப்பது, பொறுப்பு கொடுப்பது பற்றி பேச்சு வந்தபோது, அழகிரி அவசரமாக மறுத்து விட்டாராம்.

'இந்தியா முழுவதற்குமான மத்திய அமைச்சர் பதவியில் உட்கார்ந்து எழுந்து விட்டேன், இனிமேல் எனக்கு கட்சியோ, பதவியோ பெரிதில்லை. ஆனால், மகனுக்கு உரிய பங்கும், பதவியும் வந்தாக வேண்டும்' என, நிபந்தனை விதித்தாராம்.

அநேகமாக இந்த விஷயத்திற்கு தான் வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஸ்டாலின் தரப்பும் முன்கூட்டியே பேசி, தயாநிதி அழகிரிக்காக சில ஏற்பாடுகளை முடிவு செய்து வைத்திருந்தது. ராஜ்யசபா எம்.பி., பதவியும், முரசொலி அறக்கட்டளையில் பொறுப்பும் அதில் அடக்கமாம்.
இதை அழகிரி திருப்தியுடன் ஏற்றுக் கொண்டார்; அதனால் தான், பா.ஜ., விரித்த வலையில் சிக்காமல் நழுவினார் என, அறிவாலய வட்டாரம் ஆனந்தமாக கதைக்கிறது.


'ரீயாக்ஷன்' கேட்க கமலாலயத்துக்கு சென்றோம். 'எங்கள் தேசிய தலைவர் நட்டா, மதுரையில் மூன்று நாட்கள் முகாமிட்டபோதும், அழகிரி அவரை சந்திக்க வராமல் இருந்த போதே, 'எங்களுக்கு கொஞ்சம் 'டவுட்' வந்தது. நீர் அடித்து நீர் விலகாது என்பது போல அண்ணனும், தம்பியும் சமரசமாக போய்விடுவர் என, தலைவர் சொன்னார். இதயம் இனிப்பதும் கண்கள் பனிப்பதும் அந்த குடும்பத்தில் அடிக்கடி நடப்பது தானே...' என, ஏமாற்றத்தை மறைக்காமல் சொன்னார் ஒரு நிர்வாகி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (39)

 • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

  வடநாட்டான் வரலாறு இப்படி தான்.

 • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு ஒரு பழமொழி தமிழின் சிறப்பே அதுதானே எந்த சந்தர்ப்பத்துக்கு ஒரு பழமொழியிருக்கும் ஊரு அப்படி ரெண்டு படலைன்னா ரெண்டாக்கி குளிர் காய்ந்து கொள்வார்கள் சமர்த்துக் குட்டிகள்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  வடை போச்சே .. வடை போச்சேன்னு சொல்ல வைத்ததும் ஒரு வகை கலைதானோ ? என்னதான் நடக்கும் நடக்கட்டும் இருட்டினில் மீது மறையட்டுமே .. தன்னாலே உதய சூரியனின் ஒளிவரும் தயங்காதே .. என்ற பாட்டுடன் விவாதம் முற்றுபெற்றதும் உண்மையன்றோ ..

 • சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா

  பாஜகவிற்கு அடுத்தடுத்து பெரிய அடி .. முதலில் ரஜினி கால்களை பிடித்து பார்த்தனர் . பின்னர் அழகிரி .. இவர்களது வடநாட்டு வேலை தமிழகத்தில் எடுபடாமல் போனதுதான் சிறப்பு .

 • murugan -

  இங்கு முதல்வரும் துணை முதல்வரும் ஒன்று சேர்ந்து பணிபுரியுலம. ஆனால் இரு சகோதரர்கள் சேரக்கூடாது என நினைப்பது சரியா?

Advertisement