dinamalar telegram
Advertisement

கோவில் கோவிலாக சுத்தும் ஓ.பி.எஸ்.,சின் மகன்!

Share
Tamil News

கோவில் கோவிலாக சுத்தும் ஓ.பி.எஸ்.,சின் மகன்!



''தலைவரை சந்திச்சதுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்துட்டா ஓய்...'' என, முதல் ஆளாக, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கட்சி மேட்டர் இல்லை ஓய்... பதிவுத்துறையில தான் இப்படி நடந்திருக்கு... பத்திரப் பதிவுத் துறையில, உதவியாளர்களை, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களா நியமிக்க போறா ஓய்...

''இதுல, இடஒதுக்கீடு ரீதியா பிரச்னைகள் இருக்கு... நீதிமன்ற அனுமதியோட, 85 பேருக்கு போஸ்டிங் போட பதிவுத்துறை தயாராகிட்டு இருக்கு ஓய்...

''இதைக் கேள்விப்பட்ட, 20 உதவியாளர்கள், சில நாட்களுக்கு முன்னாடி, திடீர்னு பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு போயிட்டா... 'தகுதி பட்டியல் விபரங்களை எங்களுக்கு கொடுக்காம, 'போஸ்டிங்' போடப்டாது'ன்னு தலைவர்கிட்ட
சொல்லியிருக்கா ஓய்...

''ஆனா, 'முறையான முன் அனுமதி இல்லாம, எப்படி வந்தீங்க'ன்னு கேட்டு, ஐ.ஜி., அலுவலக அதிகாரிகள் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுத்து இருக்கா... 'துறைத் தலைவரை சந்திச்சதுக்கு நோட்டீஸ் கொடுக்கறதா'ன்னு அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''முதல்வர் கூடவே வலம் வந்துட்டு இருக்காரு பா...'' என, அடுத்த தகவலை துவங்கிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''திருச்சிக்கு பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தர், முதல்வர் இ.பி.எஸ்., பிரசார கூட்டங்கள்ல தவறாம கலந்துக்கிறார்... முதல்வருக்கு பூங்கொத்து தர்றது, கூழை கும்பிடு போடுறதுன்னு, முதல்வர் கண்ணுல படுற மாதிரியே நடந்துக் கிறாரு பா...

''பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல பிரச்னைகள்ல சிக்கிட்டதால, வர்ற தேர்தல்ல தனக்கு, 'சீட்' கிடைக்குமான்னு, அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்... இதனால, முதல்வருக்கு மிகவும் வேண்டிய, கொங்கு மண்டல அமைச்சருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவர் மூலமா, முதல்வர் மனசுல இடம் பிடிச்சு, சீட்டை வாங்கிடணும்னு, 'பிளான்' போட்டிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''தமிழ்ச்செல்வன் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே, ''அங்க ஒருத்தர் முதல்வரை சுத்துதாரு... இங்க ஒருத்தர், கோவிலை சுத்துதாரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''யாருன்னு விளக்கமா சொல்லுங்க அண்ணாச்சி...'' என்றார், அந்தோணிசாமி.

''துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ரொம்பவே தெய்வ பக்தி உள்ளவர்... அடிக்கடி சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில்களுக்கு போயிட்டு வருவாரு... அதே மாதிரி, ராஜபாளையம் பக்கத்துல இருக்கிற இவரது குல தெய்வம் கோவிலுக்கும் அடிக்கடி போயிட்டு வர்றாரு...

''இவரது இரண்டாவது மகன் ஜெய பிரதீப்பும், அப்பா பாணியில, கோவில், கோவிலா சுத்திட்டு இருக்காரு வே... அதுவும் இல்லாம, பெரும்பாலான நாட்கள்ல, விரதமும் இருக்காரு... இப்பவும், தேர்தல்ல, ஆளுங்கட்சியும், தன் அப்பாவும் ஜெயிக்கணும்னு, பல கோவில்களுக்கு போயிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஆலயம் தொழுவது சாலவும் நன்றுன்னு அவ்வையார் சும்மாவா சொல்லியிருக்காங்க...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement