dinamalar telegram
Advertisement

இது நானா சேர்த்த கூட்டம்! அ.தி.மு.க.வில் ஒரு கலாட்டா

Share
தலைவர்கள் வரும்போது, வரலாறு காணாத கூட்டம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது, எல்லா கட்சியிலும் எழுதப்படாத விதி. ஆனால், இப்போது எந்த தலைவருக்கும் தானாய் கூடும் கூட்டம் என்பது, கட்சிக்காரர்களோடு முடிந்து விடுகிறது. அதிலேயே பலர், பாதியில் நழுவி விடுகின்றனர். அன்றாட பிழைப்புக்காக உழைத்து பிழைக்கும் பொது மக்கள் இந்த திசைக்கே வருவதில்லை.

இதனால் தான், ஆள் பிடிக்கும் வழக்கம் தோன்றியது. அந்தந்த கட்சியின் பண பலத்துக்கு ஏற்ப, ஆட்களை திரட்டி காட்டுகின்றனர். கூட்டணி கட்சிக்காக ஆள் சேர்க்கும் கட்டாயம், பெரிய கட்சிகளுக்கு கிடையாது. ஆனால், கூட்டணி கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தால், மேட்டரே வேறுதானே. அப்படித்தான், பிரதமரை வரவேற்க பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது, அ.தி.மு.க., மேலிடம். பத்தாயிரம் பேரை திரட்டி வர, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலர் அசோக்கிற்கு உத்தரவிட்டது. அதற்கான செலவுக்காக, 20 லட்சம் பெற்றுக் கொண்டார் அவர்.
ஆனால், அந்த தொகையில் பாதியை அமுக்கி விட்டார் அசோக் என, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.க்கு புகார் போனது. அனுப்பியவர், வேளச்சேரி பகுதி அ.தி.மு.க., செயலர் மூர்த்தி. 'ஒரு மணி நேரம் நிக்கணும். தலைக்கு 200 ரூபா குடுத்து அஞ்சாயிரம் பேர மட்டும் வரவச்சு, மீதிய ஸ்வாஹா பண்ணிட்டார்' என்பது, மூர்த்தி வாதம்.

அசோக், மூர்த்தி இருவருக்கும் ஏழாம் பொருத்தம். துணை முதல்வர் ஆசியால் பதவி பெற்றவராம் அசோக். மூர்த்திக்கு மைத்ரேயன், விருகை பாபு போன்றவர்கள்தான் சப்போட். விவகாரம், தி.மு.க., 'ஐ.டி., டீமால்' வைரல் ஆக்கப்பட்டதால், மேலிடம் டென்ஷன் ஆகிவிட்டது. மூர்த்திக்கு நெருக்கடி.

“என்னோட லெட்டர் பேடை திருடி, யாரோ லெட்டர் எழுதி, என் கையெழுத்த போட்டு மேல அனுப்பிருக்காங்க. புகார் குடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு இருக்கேன்,” என்றார், நமது நிருபர் போன் போட்டபோது. அரசியலில் இதெல்லாம் சகஜம். அசோக்காவது, 20 ல் பத்தை செலவு செய்திருக்கிறார். தென்சென்னை வடக்கு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், அதுவும் கிடையாதாம்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விட்டு விட்டால், தொண்டர்கள் சம்பாதிப்பது எப்படி?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மற்ற நாடுகளில் தெருவை சுத்தம் செய்பவர்கள் சுத்தம் செய்யும் முன், சுத்தம் செய்தபின் கைப்பேசியில் தேதி, நேரத்தோடு போட்டோ எடுத்து அனுப்பவேண்டும். அதுப்போல கணக்கை சுத்தமாக வைத்திருந்தால், போட்டோவுடம் நிரூபிக்கலாமே?

 • Senthil Kumar - chennai,இந்தியா

  இங்கே ஒரு அடிமை கைகூலிகூட கூவ வரமாட்டான்.

 • Ramamurthy N - Chennai,இந்தியா

  இதெல்லாம் அரசியல்ல சர்வ சாதாரணமப்பா. யாரும், எந்த ஒரு கட்சிக்கும் கூட்டம் வருவதில்லை

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இதற்க்கு இப்படி ஏன்னென்றால் மோடிக்கு எப்படி சேர்த்து இருப்பார்கள் கடவுளுக்கு வெளிச்சம் ,அது மட்டும் என்ன எவனோ சேர்த கூட்டம் தாம்

Advertisement