ADVERTISEMENT
சென்னை : சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, அவரது ஆதரவளர்கள், ஆன்லைன்வாயிலாக சர்வேயை துவக்கி உள்ளனர்.
அரசியல் கட்சி பின்புலம் எதுவுமின்றி, சிலர் தேர்தலில் களம் இறங்க தயாராகி வருகின்றனர். இதில், சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, முதல்வர் வேட்பாளராக்க சிலர் களம் இறங்கி உள்ளனர். இதற்காக,wesupport-sagayamias-2021cm.comஎன்ற பெயரில், ஒரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அதில், தன்னார்வலர்கள், ஆதரவாளர்களை திரட்டும் வகையில், ஒரு சர்வே நடத்தப்படுகிறது.
'அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன்' என்ற சகாயத்தின் பேட்டி மற்றும் காணொளியுடன் சர்வே துவங்குகிறது. சர்வேக்கு அழைப்பு விடுக்கும் வகையில் கூறப்பட்டிருப்பதாவது: சகாயம் ஐ.ஏ.எஸ்.,சை அரசியலுக்கு அழைத்து, அவரோடு இணைந்து, 2021 சட்டசபை தேர்தலில் களம் காண விருப்பம் உள்ள, ஒரு கோடி பேரை ஒன்று திரட்டி, சகாயத்திடம் நம் விருப்பத்தை கொண்டு செல்வோம். மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, பெயர், வயது, பாலினம், மெபைல் போன் எண், மாவட்டம், சட்டசபை தொகுதி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன. அதன்பின், 'சகாயம் தலைமையில், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்; நிதி உதவி அளிக்க விரும்புகிறேன். 'தொண்டராக பிரசாரம் செய்ய விரும்புகிறேன்; ஆதரவாளராக இருக்கிறேன்' என்ற விபரங்கள் தரப்பட்டு, இதற்கு விருப்பம் உள்ளதா என, கேட்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏதாவது ஒரு விடுமுறை நாளில், பொதுக்கூட்டம் நடத்தினால், அதில் பங்கேற்பது குறித்தும், விருப்பம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, 'கூகுள் பார்ம்' முறையில் பதிவிட வேண்டும். இவ்வாறு, ஆன்லைன் வழியே சர்வே மேற்கொள்ளப்படுகிறது.

மத வெறியர்கள் எல்லாம் கல்வி அறிவு பெற்று மாறிக் கொண்டுள்ள நாட்களில் கல்வி அறிவு நிரம்பப்பெற்ற மக்கள் மத வெறி அரசியலை நோக்கிச் செல்வது ஆபத்தானது