dinamalar telegram
Advertisement

தி.க., வீரமணி மகனுக்கு விநாயகர் கோவிலில் டும் டும்

Share
முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், பா.ஜ.,வில் சேர்ந்தார். இதற்காக, சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய தியாகராஜன், 'நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள். திராவிட கழக தலைவரான கி.வீரமணியின் மகனுக்கே பிள்ளையார் கோவிலில் தான் திருமணம் நடந்தது' என்றார்.

'இதென்ன கலாட்டா' என, கராத்தேவிடம் கேட்டோம். அவர் நீண்ட கதை சொன்னார். அதன் சுருக்கம் இது:வீரமணியின் மகன் அன்புராஜு. தற்போது, தி.க., வின் துணை தலைவர். ஈ.வெ.ரா., உருவாக்கிய பல கோடிகள் புரளும், தி.க., அறக்கட்டளையை நிர்வகிப்பதும் அவர் தான்.

அந்த அன்பு மகன், மலையாளி பெண்ணை காதலித்தார். வீரமணி ஏற்க வில்லை. கலப்பு மணம் கூடாது என்றார். மகன் கேட்கவில்லை. காதலர்களை பிரிக்க, ஆட்களை அனுப்புகிறார் வீரமணி. காதலர்கள் தப்பி ஓடுகின்றனர்.தியாகராஜனின் உதவியை நாடினார் அன்பு. ஓட்டல் அதிபரின் உதவியுடன், ஜோடியை சைதாப்பேட்டையில் தங்க வைக்கிறார் தியாகு.

குருக்கள் ஒப்புதல்



அங்கிருந்து, காரில் புதுச்சேரிக்கு போகின்றனர். காங்கிரஸ் தலைவர் கண்ணனை சந்திக்க, அவர் உதவுகிறார். ஆனால், புதுச்சேரி சட்ட திட்டங்கள், அந்த திருமணத்துக்கு உதவவில்லை.கடலுார் போகின்றனர். பதிவு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

கலப்பு திருமணம் என்பதால், சிறப்பு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்ய முடியும். அதற்கு, ஏதாவது ஒரு கோவிலில் திருமணம் நடந்ததாக சான்றிதழ் வேண்டும். திருமணத்தை நடத்திய குருக்கள் ஒப்புதலும் வேண்டும் என்கிறார் பதிவாளர்.நாத்திக செம்மலின் மகன் ஆயிற்றே என, தியாகு தயங்குகிறார்.

அன்பு அசரவில்லை. காதலியை கைப்பிடிக்க எதற்கும் தயார் என்கிறார். எதிரே, வினை தீர்த்த விநாயகர் கோவில். குருக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசி, விநாயகர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அந்த சான்றிதழை வைத்து, உடனடியாக பதிவும் முடிந்தது.

கோடிகள்



மணமக்கள் சென்னை திரும்பினர். வீரமணி பிடிவாதமாக இருந்ததால், வீடு மாறி, மாறி குடும்பம் நடத்தினர். ஆறு மாதங்களாக அன்புவின் சித்தி எடுத்த முயற்சியால், வீரமணி மனம் மாறி, மகனையும் மருமகளையும் வீட்டுக்குள் அனுமதித்தார்.'ஹிந்து கோவிலில் திருமணமா... ஏற்க மாட்டேன்' என கொந்தளித்த வீரமணி, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து இருந்தால், கோடிகள் புரளும் ஈ.வெ.ரா.,வின் அறக்கட்டளையை நிர்வகிக்க வேறு ஆளையல்லவா தேடியிருக்க வேண்டும்? இது தான் கதை சுருக்கம்.

'வீரமணியோ அவரது ஆட்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், முழுக்கதையை ஆதாரங் களுடன் வெளியிட தயார்' என்கிறார் கராத்தே தியாகராஜன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இதெல்லாம் தேவையில்லாத வேலை வீரமணி இந்துமதத்தை கேவலமாகவே பேசிக்கொண்டிருந்து விட்டுப்போகட்டும் நாம் பெருந்தன்மையாகவே இருப்போம் இது அடுத்தவர் குடும்ப விவகாரம் மேலும் அன்பு மணந்த பெண் கேரளா பிராமணர் என்று சொல்வார்கள்

Advertisement