ADVERTISEMENT
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் இ.பி.எஸ்., ஆகியோர் குறித்து, தி.மு.க.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி பேசியதை கேட்டு, அ.தி.மு.க.வினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை அம்பத்துார் கூட்டத்தில், பாரதி பேசியது இது தான்:இ.பி.எஸ்., மீது ஊழல் வழக்கு போட்டேன். அதை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆண்மை இருந்தால், துணிவிருந்தால், முதல்வர் இ.பி.எஸ்., விசாரணையை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், என்ன செய்தார்; விசாரணையை எதிர்கொள்ளாமல், உச்ச நீதிமன்றம் சென்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கி இருக்கிறார்.
இதைத்தான் ஸ்டாலின் அழகாகச் சொன்னார். 'அவர் ஸ்டேட் சீப் மினிஸ்டர் அல்ல; ஸ்டே சீப் மினிஸ்டர்' என்று. 'ஸ்டே ஆர்டர்'ல ஓடிக்கிட்டு இருக்கு உன்னோட ஆட்சி.தமிழகம் முழுக்க இருந்து ஆட்களை புடிச்சுகிட்டு வந்து, மெரினா கடற்கரையில, ஜெயலலிதா சமாதி முன்னால இறக்குறான். இ.பி.எஸ்., -- ஓ.பி.எஸ்., நினைத்தனர், மொத்த கூட்டமும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும்னு.கூட்டம் முழுக்க, அந்த மூதேவி முகத்தை பார்க்க விரும்பாம, கருணாநிதி நினைவிடத்துக்கு வந்துட்டாங்க.

உன் கிட்ட காசை வாங்கிட்டு, உன் கரை வேட்டிய கட்டிகிட்டு வந்து, என் தலைவனுக்கு தான் அஞ்சலி செலுத்திட்டுப் போனான். அதுக்கு என்ன காரணம் - 'தட் ஈஸ் த பல்ஸ் ஆப் த பீப்பிள்.'சென்னையில, ஒரு மந்திரி இருக்காரு. ஜெயகுமாருன்னு பேரு. அவரு ஆபீஸ் பக்கம், 25 வயசுக்கு கீழே இருக்குற பசங்க போக முடியலை. அவ்வளவு யோக்கியமான மனுஷன். பத்தரை மாத்து தங்கம்; யோக்கிய சிகாமணி. எங்களை பார்த்து வாரிசு அரசியல்... வாரிசு அரசியலுங்கறான். உங்களுக்கு வாரிசு இல்லைன்னா, அதுக்கெல்லாம் நாங்க ஏற்பாடு செய்ய முடியுமா?
பழனிசாமி., என்ன செஞ்சிஇருக்காரு தெரியுமா? டேபிளுக்கு ரெண்டு கால் இருக்குது. அந்த காலுக்கு நடுவுல புகுந்து, அந்தம்மா கால்ல போய் விழுந்துட்டான்.யாருடைய உதவியால, முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து இருக்கோம்ங்கறதையே அந்த நாய் மறந்துடுச்சு.
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவனுக்கு எல்லாம், நல்ல முடிவு ஏற்பட்டதா சரித்திரம் இல்லை...எம்.ஜி.ஆர்., கூட அப்படித்தான். இந்த இயக்கத்தால தான் எம்.ஜி.ஆர்., வளர்த்தெடுக்கப்பட்டாரு. இயக்கத்த அவரு காட்டிக் கொடுத்த போது, என்ன நடந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால் தான், அவரால கடைசி காலத்துல பேச முடியாம போச்சு.
எம்.ஜி.ஆருக்கு பின்னால, ஆர்.எம்.வீ.,யவா நீங்க முதல்வர் ஆக்குனீங்க? இல்லையே. ஜானகியை தானே முதல்வராக்கினீங்க.அதுக்கு பின்னால என்ன ஆச்சு? ஜெயலலிதாவை தானே உருவாக்குனீங்க. 25 வருஷம், எம்.ஜி.ஆருக்கு மனைவியா திரையில் தோன்றியவர் தான் ஜெயலலிதா. உங்களால ஏன் நெடுஞ்செழியனை முதல்வராக்க முடியலை? ஏன் பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வர முடியலை?இப்படி பேசிக் கொண்டே போகிறார், ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,
அந்த பேச்சு குறித்து, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியதாவது: தி.மு.க.,வின் கழிவுப் பொருள் ஆர்.எஸ்.பாரதி. கழிவுப் பொருளில் இருந்து துர்நாற்றம் தான் வீசும். சந்தனம், ஜவ்வாது மணம் வராது. இப்படிப்பட்ட சாக்கடைகளின் சங்கமமான, தி.மு.க.,வில் இருந்து கொண்டு, ஆர்.எஸ்.பாரதி, அருவருக்கத்தக்க வார்த்தைகளை மேடைகளில் உமிழ்ந்து கொண்டு இருக்கிறார்.
கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்று, ஓடோடி ஒளியும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களின் நாக்கை அறுத்து விடும் அளவுக்கு, எங்கள் கட்சியிலும் ஆட்கள் பேசத் துடிக்கின்றனர். ஆனால், நாகரிகம் கருதி அமைதி காக்கின்றனர். இனியாவது அவர் நாவை அடக்கிப் பேச வேண்டும்.இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.
- நமது நிருபர் - -
வாசகர் கருத்து (252)
என்ன தப்பா பேசிட்டாரு ? திமுக தலைவருங்கோ சாதாரணமா இப்பிடித்தான் பேசுவங்கோ. கண்ணியமான பேச்சுக்கு ஒரு உதாரணம் 'உள் பாவாடை நாடாவை அவிழ்த்து பார்த்த திரவடிம் தெரியும் "
ஜெபராஜ் ஜெயரஞ்சன் ஆய்வு கட்டுரைக்கு இவர் கட்சி எதிர்ப்பு இல்லை, அதன் எதிர் வினை இது. அதிமுகவின் ஸ்லீப்பர் செல்
ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவருக்கே பொருந்தும். எதையாவது பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்துவிட வேண்டும் என்றிருக்கும் இவரைப் பற்றி, இதற்கு மேல் பேசினால் நமது நேரம்தான் வீண்.
பாரதி என்பது நாவிற்கு தெய்வம் சரஸ்வதி யின் ஒரு பெயர். அந்த பெயரை கொண்டுள்ள இவன் நாவிலிருந்து வரும் சொற்கள் மிகவும் கேவலமாக உள்ளன. இவன் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அப்படி என்றால் கலைஞர் கடைசி காலத்தில் பேச முடியாமல் சுய நினைவின்றி இருந்ததற்கு காரணம் என்ன என்று தெளிவாக சொல்ல முடியுமா ஆர் எஸ் பாரதியால்? அதற்க்கு அவருக்கு தெரிந்த மொழியில் கேட்பதானால் அவருக்கு ஆண்மை இருக்கிறதா?