dinamalar telegram
Advertisement

விவசாயிகளின் உரிமை பறிக்கப்படவில்லை: பிரதமர் மோடி

Share
Tamil News
புதுடில்லி: ''விவசாயிகள் மீது நாங்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளோம். அவர்களிடமிருந்து எந்த உரிமையும் பறிக்கப்படவில்லை,'' என, பிரதமர் மோடி கூறினார்.

பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில்விவாதம் நடந்தது.

முன்மாதிரிவிவாதங்களுக்கு பதில் அளித்து, பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த, 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வது பற்றி, நாம் யோசிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. நாம் சுதந்திரம் பெற்ற போது, 'இந்தியா ஒரு நாடாக செயல்பட முடியாது; பல நாடுகளாக சிதறும்' என, உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்புகளை, கணிப்புகளை பொய்யாக்கி, இன்று வலிமையான ஜனநாயகம் கொண்ட நாடாக வளர்ச்சி யடைந்து, உலகத்துக்கே முன்மாதிரியாக உள்ளோம்.

கொரோனா பரவல் காலத்தில், நம்மை நாமே காத்து கொண்டதுடன், உலக நாடுகளுக்கும் உதவி செய்தோம். கடவுளின் அருளால், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டோம் என, காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி கூறினார்.நாம், கடவுள் அருளால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது உண்மை தான். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், இறைவன் வடிவில் வந்ததால் தான் நாம் பாதுகாப்பாக இருந்தோம்.

விவசாயத்துறையை மேம்படுத்தவே, மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களது நோக்கம் நேர்மையானது. இந்த சட்டங்கள் அமல்படுத்திய பின், இதுவரை எந்த சந்தையும் மூடப்படவில்லை. நாட்டில், குறைந்தபட்ச ஆதார விலை முடிவுக்கு வந்துவிட வில்லை. இந்த சபையும், இந்த அரசும், வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து கூறும் விவசாயிகளை மதிக்கிறது. அரசின் மூத்த அமைச்சர்கள், விவசாயிகளுடன் தொடர்ந்து பேசுவதற்கு. அதுவே காரணம்.

வரதட்சணை கொடுமை, முத்தலாக் மற்றும் குழந்தைத் திருமணம் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள், யாரும் கேட்டு கொண்டு வரப்படவில்லை. இந்தியா முன்னேற அந்த சட்டங்கள் தேவை என்பதால் கொண்டு வரப்பட்டது. வேளாண் சட்டங்களும் அப்படிபட்டது தான். ஆனால், இந்த சட்டங்கள் மீது, விசித்திரமான விவாதம் ஏன்?

தங்களின் விளைபொருட்களை சந்தைக்கு வெளியில் விற்க, விவசாயிகள் கட்டாயப்படுத்தப் படவில்லை. அது முற்றிலும் விவசாயிகளின் விருப்பம்.ஆனால், இந்த சட்டங்களுக்கு வர்ணம் பூசி காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.இந்த சட்டங்களால், உங்களுடைய உரிமைகள் ஏதேனும் பறி போகிறதோ என, எந்த விவசாயியிடமாவது கேட்டு பாருங்கள். இல்லை என்று தான் அவர் பதில் அளிப்பார்.

முக்கிய அம்சங்கள்வேளாண் சட்டங்களின் நோக்கம், முக்கிய அம்சங்கள் பற்றி விவாதம் நடத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும். இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு, யாரிடமும் உரிய காரணம் இல்லை. புது சட்டங்கள், விவசாய பொருள் விற்பனை செய்யும் மண்டிகளை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பழமையான கட்சி பிளவுபட்டுள்ளது.

காங்கிரசின் நிலைப்பாடு, ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் மாறுபட்டுள்ளது. இது போன்ற பிளவுபட்ட மற்றும் குழப்பமான கட்சியால், நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. தொலைத் தொடர்பு, மருத்துவம் போன்ற துறைகளில், தனியார் துறையின் பங்கை நாம் காண்கிறோம். கொரோனா பரவலின் போது, மனித குலத்திற்கு, இந்தியாவால் சேவை செய்ய முடிகிறதென்றால், அதற்கு தனியார் துறையின் பங்கும் காரணம்.இவ்வாறு, அவர் பேசினார்.

பிரதமர் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க.., ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இதற்கிடையே வேளாண் சட்டத்தை எதிர்த்து வரும், 18ம் தேதி, நான்கு மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

தீர்மானம் நிறைவேற்றம்லோக்சபாவில் பிரதமர் பேசி முடித்த பின், ஜனாதிபதி உரைககு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களை, சபாநாயகர் ஓம் பிர்லா படித்தார். இவை அனைத்தும், குரல் ஓட்டு மூலம் நிராகரிக்கப்பட்டன. இதன் பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் ஓட்டு மூலம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, லோக்சபாவில் காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., ஆகியகட்சிகளின் உறுப்பினர்கள் இல்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அரைச்ச மாவையே.............................

 • Rajas - chennai,இந்தியா

  /////இந்த சட்டங்கள் அமல்படுத்திய பின், இதுவரை எந்த சந்தையும் மூடப்படவில்லை. நாட்டில், குறைந்தபட்ச ஆதார விலை முடிவுக்கு வந்துவிட வில்லை. ///// எதுவுமே மாறவில்லை என்றால் ஏன் புது சட்டம் கொண்டு வந்தீர்கள். அப்படியே இருந்து விட்டு போகலாமே.

 • தமிழ் -

  உரிமை பறிக்கப்படவில்லை மாறாக ...

 • kumaravel - chennai,இந்தியா

  இதற்க்கு பதில் சொல்ல தெரியாமல் BJP கார்ன் திட்டுவனுகளே , இன்னும் காணும்.

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  பொதுத்துறை பங்குகளை விற்பது, தனியார் மயமாக்குவது, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது அரசாங்கமும்,தொழில்அதிபர்களும் மட்டும் கல்லா கட்டவேண்டும்.சாமானிய மக்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லை இவர்களுக்கு. Airports will be sold, Railway stations will be sold, Roadways will be sold, Electric transmission line will be sold, GAIL will be sold, Indian oil pipelines will be sold, Ware house will be sold, (MASTERSTROKE BUDGET 2021 )

Advertisement