Load Image
dinamalar telegram
Advertisement

காருண்யா நகர் பெயரை நீக்க ஒருமித்த தீர்மானம்: ஊராட்சி நிர்வாகிகளிடம் கலெக்டர் விசாரணை

Tamil News
ADVERTISEMENT
கோவை:கோவை, மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில், காருண்யா நகர் என குறிப்பிட்டிருப்பதை, 'நல்லுார் வயல்' என மாற்றுவதற்கு நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக, ஊராட்சி நிர்வாகிகளிடம், கலெக்டர் ராஜாமணி விசாரணை நடத்தினார்.


கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் ஒன்றியம், மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லுார் வயல் கிராமத்தில், மத போதகர் பால் தினகரன் நடத்தும் காருண்யா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 1995க்கு முன்பு வரை, நல்லுார் வயல் என்றே, அப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. முதலில், தபால் நிலையத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றினர். தொடர்ச்சியாக, தொலைபேசி நிலையம், காவல் நிலையத்தின் பெயர்களை படிப்படியாக மாற்றினர். நெடுஞ்சாலைத்துறை போர்டுகளிலும், அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளிலும் காருண்யா நகர் என எழுதப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


'அத்திப்பட்டி' போல், நல்லுார் வயல் கிராமத்தின் பெயரையே, அரசு அலுவலக பதிவேடுகளில் இருந்து புதைக்கும் செயலை தடுக்கவும், கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்கவும், 'நல்லுார் வயல் பாதுகாப்பு குழு' என்கிற அமைப்பை, கிராம மக்கள் உருவாக்கி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பேரணி நடத்தினர்.நல்லுார் வயல் என்கிற பெயரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Latest Tamil News

அதிகாரிகள் அழைப்புமத்வராயபுரம் ஊராட்சியில், தலைவர் கிட்டுசாமி தலைமையில், ஊராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. துணை தலைவர் வெற்றிவேல், செயலர் தேவி மற்றும், 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவர் ஒருமித்த ஆதரவுடன், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களிலும், 'காருண்யா நகர்' என்ற பெயரை, நல்லுார் வயல் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதையறிந்த, தொண்டாமுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டு, 'யாரை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றினீர்கள்' என, கேட்டுள்ளார்.


அதற்கு, 'எங்கள் ஊராட்சியில், எங்கள் மக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற, யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்' என, தலைவர் கிட்டுசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.


உடனே, 'தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன், எங்களிடம் சொல்லியிருக்கலாமே' என கூறி விட்டு,'உங்களை, கலெக்டர் சந்திக்க விரும்புகிறார்;நேரில் வாருங்கள்' என,அழைப்பு விடுத்தார்.


ஊராட்சி தலைவர், துணை தலைவர், செயலர் உள்ளிட்டோர், கலெக்டர் ராஜாமணியை சந்திக்க சென்றனர். ஊரக வளர்ச்சி துறை (ஊராட்சி) உதவி இயக்குனர் சீனிவாசன் உடனிருந்தார். அவர்களிடம் இருந்து, தீர்மானம் நிறைவேற்றிய பதிவேடு புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.

அப்போது, 'தீர்மானம் நிறைவேற்றும் முன், கேட்டிருக்கலாமே' என, கலெக்டர் கேட்டுள்ளார். அதற்கு, 'எங்களது கிராமத்தின் பெயர், 'நல்லுார் வயல்' என்றே, அரசிதழில் இருக்கிறது' என கூறி, அதன் நகலை, ஊராட்சி தலைவர் காண்பித்துள்ளார்.

'ஆய்வு செய்து முடிவு'கலெக்டர் ராஜாமணியிடம் கேட்ட போது, ''யாரிடமும் விசாரணை நடத்தவில்லை; யாரையும் கூப்பிடவில்லை. அங்குள்ள தகவல்களை காட்டுவதற்காக வந்தார்கள். கலெக்டர் என்கிற முறையில் நடவடிக்கை எடுக்க, எந்த முன்மொழிவும் வரவில்லை. சூழ்நிலையை கவனித்து வருகிறேன். சம்பவம் நடந்திருக்கிறது; சரியாக ஆய்வு செய்து, முடிவெடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்,'' என்றார்.வாசகர் கருத்து (59)

 • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

  அல்போன்சு மிக்கெழு ...நல்ல யோசிச்சுப்பாரு ..உங்க அப்பன் பாட்டன் பெரு என்னனு அப்பள பேசு ..தமிழை பற்றி பேசுவதுற்கு நீ தமிழனா ? பொங்கல் வைப்பாயா ?

 • spr - chennai,இந்தியா

  " மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தும், இன்னமும் சென்னை உயர் நீதி மன்றம் பெயர் மெட்றாஸ் ஹைகோர்ட் என்றுதான் இருக்கிறது தமிழக உயர் நீதிமன்றம் என மாற்ற அரசாலேயே முடியவில்லை". அப்படியிருக்க, அரசு அலுவலகங்களில், கூட அதிகாரிகள் உதவியில்லாமல், பெயர்ப்பு பலகைகளில், காருண்யா நகர் என பெயர் மாற்றம் எவ்வாறு சாத்தியமாகும்? எவருமே பார்க்க மாட்டார்களா? அனைத்து இடங்களிலும் மாற்றுவது அத்தனை எளிதல்லவே இது முதலில் விசாரிக்கப்பட வேண்டும் பொதுவாக வெட்டி கட்டுவதானால் கூட காசு யாரேனும் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும்,ஆளுநரும், அரசு அதிகாரிகளும் இதற்கு உடன்பட்டிருந்தால்,மட்டுமே இது சாத்தியமாகும். எத்தனை கோடி கைமாறியது என விசாரிக்க வேண்டும்

 • SUBBU - MADURAI,இந்தியா

  விஜய் மல்லையா ஏன் இன்னும் இந்தியாவிற்கு அழைத்துவரப்படவில்லை என கத்தியவனெல்லாம் இந்த பால் தினகரன் எப்பொழுது இந்தியா வருவான் என கேட்கவே இல்லையே ஏன்?

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  கொரோனக்கல் பிழைக்கிறார்கள். குருடர்கள் பார்க்கின்றனர்- செவிடர்கள் கேட்கின்றனர்- முடவர்கள் நடக்கின்றனர்' என்பது போன்ற கருத்துக்கள் எவ்வளவு முட்டாள்தனம்? அப்படி என்றால் அணைத்து ஆஸ்பத்தரியையும் மூடி விட்டு இவனிடம் வைத்தியம் செய்ய கிளம்பி விடலாமே அங்கே உள்ளே நடக்கும் பணம் சார்ந்த,அக்கிரமங்கள் இங்கே எழுத்தில் எழுத முடியாது.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, கனடா ஐரோப்பா நாடுகளில் உள்ள தீவிரவாத மதமாற்ற அமைப்புகள் வழிபட்டு தலங்களுக்கு வரும் மக்களிடம் இருந்து இந்திய மக்களை பற்றி மிக கேவலமாக பொய் செய்திகளை பரப்பி அவர்களிடம் டொனேஷன் பெறுகிறார்கள். இந்த தொகை இந்தியா மதிப்பில் மிக பெரியது. உதாரணமாக ஒரு மத போதகர் ஒரு லக்ஷம் டொனேஷனாக பெற்று கொண்டால் அதில் ஒரு சிறய தொகையை இந்தியாவில் சில ஆயிரம் செலவு செய்வர். மீதி 90 ஆயிரம் அவருடைய சொந்த கணக்கிற்கு செல்லும். இந்த தொகை மூலம் சட்ட விரோத நடவடிக்கைகள் நம் நாட்டில் அரங்கேறும். இந்த முழு தொகையையும் இந்தியா ஏழைகளுக்கு செலவு செய்ததாக, வெளி நாடு டொனேஷன் அனுப்பியவர்களுக்கு பொய் கணக்கு செல்லும். ஒரு பழைய பைக்கில் வந்தவர்கள் சிலர் 40 லக்ஷம் கார்களில் ஊர்வலம் செல்வதை நாம் பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement