Load Image
dinamalar telegram
Advertisement

வலையர் புனரமைப்பு வாரியம்: முதல்வர் இ.பி.எஸ்., உறுதி

மதுரை; ''முத்தரையர் மக்களின் எதிர்பார்ப்பான வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, மதுரையில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த, வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.Latest Tamil News
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், மதுரையில் நேற்று, வலையர் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:'முத்தரையர்கள் யாவருக்கும் உணவளித்து, செல்வம் உடையவர்களாக வாழ்ந்த வரலாற்றை பெரும் முத்தரையர் பெரிது' என்ற நாலடியார் பாடல் வழியாக அறிய முடியும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முத்தரையர் உதவியுள்ளனர். மன்னர்களாக சிறந்து விளங்கிய முத்தரையர், தற்போது கலை, இலக்கியம், ஆன்மிகம், அரசியல், விவசாயம் என பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் விவசாயிகளாக உள்ளனர். திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இந்த அரசு, நெல் மணிகளை போல, கண்மணிகளாக விவசாயிகளை காத்து வருகிறது. வேளாண்மை செழிக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நடந்தாய் வாழி திட்டத்தை, 10 ஆயிரத்து, 790 கோடி ரூபாயில் நிறைவேற்றி வருகிறது. காவிரி - கோதாவரியை இணைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. காவிரி, குண்டாறு நதிகளை இணைக்க முதற்கட்டமாக, 1,800 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட உள்ளது.பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை போற்ற, திருச்சியில் அவருக்கு, ஜெயலலிதா சிலை நிறுவினார். இங்குள்ள தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை வலையங்குளம், ஆனையூரில் முத்தரையர் சிலைகள் உரிய அனுமதியுடன் அமைக்கப்படும்.

நாட்டிற்கு உணவளிக்க பாடுபடும் முத்தரையர் மக்கள் வாழ்வு மேம்பாடு இந்த அரசு உதவும். முத்தரையர் மக்களின் எதிர்பார்ப்பான வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஐகோர்ட் மறுப்புஇதற்கிடையில், மதுரையில் நேற்று நடந்த, வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநாட்டுக்கு தடை விதிக்க கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாநாட்டுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.Latest Tamil Newsமேலும், 'கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும், அரசுத் தரப்பில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். எதுவும் விருப்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், கலெக்டர், எஸ்.பி., மற்றும் சங்கத்தினர் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். இந்நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்க, இந்நீதிமன்றம் உத்தரவிடும். அரசுத் தரப்பில் பிப்., 4ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிட்டது


வாசகர் கருத்து (7)

  • periasamy - Doha,கத்தார்

    சாதி மத அரசியல் செய்வதை தேசவிரோத செயலாக கருதி சம்பந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும்

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    வலையர் -உள்நாட்டில் மீன் பிடிப்பவர்கள் ...முத்தரையர் -தமிழகத்தின் பழைய மூத்த மன்னர் குடி ....அடிப்படையில் விவசாயிகள் ..எந்த அடிப்படையில் வலையார் இந மக்களை முத்தரையர் சமூகத்துக்குள் கொண்டுவருகிறார் எடப்பாடி ? புதிய சிக்கலுக்கு பிள்ளையார் சுழியா ?

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    சமூக அந்தஸ்துக்கு ஒரு சாதிப் பெயர் .இட ஒதுக்கீட்டுக்கு அதே சாதிக்கு வேறொரு பெயர்.ஒரே சாதிக்கு ஒன்பது பெயர்.ஒரே சாதி SC/ST/MBC/BC போன்ற பிரிவுகளில் இருப்பது சாதீய இட ஒதுக்கீட்டை ஒரு கேள்விக்குறி ஆக்குகிறது.பண்டைய காலத்தில் 5-ஆம் சாதியினரான கள்ளர், மறவர், மீனவர் , வேட்டுவர், குறவர், பாணர் போன்றவர்கள் பழங்குடியினர் என்றே அழைக்கப்பட்டனர். பேசாமல் MBC பிரிவை ஒழித்துவிட்டு இதுபோன்ற சாதிகளை ST-யில் சேருங்கள்.

  • samkey - tanjore,இந்தியா

    கட்டுமரம் பாணி அரசியல். நாடே நாசமாகிவிட்டது. இனி எவனும் திருத்தப் போவது இல்லை. திருத்தவும் முடியாது. வெள்ளைக்காரன் செய்த பிரித்தாளும் சூழ்ச்சி ஜாதி. அப்போதிருந்த மக்கள் இந்த ஜாதி பாகுபாடு பாராமல் ஒன்றுபட்டு வெள்ளையனை விரட்டினார்கள். இந்த கொள்ளையர்கள் வெள்ளைக்காரன் கையிலெடுத்த ஆயுதத்தை கையிலொடுத்து நாட்டை துண்டாடுகிறார்கள். எந்த சாதி சங்க தலைவனும் யோக்கியன் கிடையாது. அவன் பின்னால் செல்லும் செம்மறியாட்டு மந்தைகள் இதை உணர வேண்டும்.

  • மணி - புதுகை,இந்தியா

    ஜாதி மதம் அரசியல்வாதிகளின் இரு கண்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement