திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு எல்லா வகையிலும் கேடுகள் சூழ்ந்துவிட்டது. உரிமைப்பெற்ற, உணர்வுள்ள, சுயாட்சி பெற்ற தமிழகமாக இல்லாமல் சொரணையற்ற, அடிமையாக, ஊழல் தமிழகமாக தான் இருக்கிறது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது, ஓ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருந்து அரசை செயல்படாமல் முடக்கிவைத்தார். அதன்பின், தனது நாற்காலியை காப்பாற்றி, கொள்ளையடிப்பதற்காக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சுயநல ஆட்சியை செய்தனர்.

இருவரும் ஒன்றாக இருப்பதுபோல் இருந்தால் தான் சுருட்ட முடியும். அண்ணாதுரை மறைவிற்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் 184 தொகுதிகளில் வெற்றிப்பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சியமைத்தோம். இதுவரை இந்தியாவில் இதுப்போன்ற மிகப்பெரிய வெற்றியை யாரும் கொடுக்கவில்லை. நான் வேல் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது?. நாங்கள் கடவுளை அவமதித்தது இல்லை, கடவுளை நாங்கள் வெறுத்ததில்லை.

அப்படியே ஸ்டாலின் அவர்கள் மொட்டையடித்துக் கொண்டு வெள்ளி வேலை கையில் எடுத்துக்கொண்டு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி வேல் , வீரவேல் என்று கூவுவாரா ? இவர் வெள்ளி வேலை கையில் ஏந்தி கோயிலுக்கு முன்னால் நின்று போஸ் கொடுக்கிறாரே அவர் நெற்றியில் திருநீறோ , குங்கும , சந்தனமோ அணிந்திருக்கிறாரா எப்படியோ எட்டு கிலோ வெள்ளி அவர் வீட்டில் உணவு அருந்தும்பிளேட் மற்றும் வெள்ளி டம்பளர்களாகவும் உரு மாறிவிட்டன