dinamalar telegram
Advertisement

பார்லி.,யில் ஆக்கப்பூர்வமான விவாதம்: பிரதமர் வேண்டுகோள்

Share
புதுடில்லி: பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று துவங்கிய நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம். இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காக, இன்னுயிரை தியாகம் செய்த தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நம்முன் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை அனைத்து எம்.பி.,க்களும் ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளின் முதல் கூட்டத்தொடரில் இன்று அடியெடுத்து வைக்கிறோம். அடுத்த10 ஆண்டுகள் தேசத்திற்கு முக்கியமானது என்பதால், அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் அனைத்து விவாதங்களும் அமைய வேண்டும். பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் பார்லிமன்ட் கூட்டத்தொடரில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக நமது பங்களிப்பு இருந்துவிடக்கூடாது. வரலாற்றிலேயே முதல்முறையாக நிதியமைச்சர் கடந்த 2020ம் ஆண்டில் 4 முதல் 5 மினி பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். அதேபோன்ற பட்ஜெட்டை 2021- - 22ம் ஆண்டிலும் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்

  விவாதம் இல்லாம பாராளுமன்றத்தை முடக்கியது யார் தலைவா ? பெட்ரோல் விலை ஏன் அதிகமாச்சு ? மக்கள் காரோண காலத்தில் துன்புறும் பொழுது புதிய நாடாளுமன்றம் அவசியமா தலைவா ? இந்த மாதிரி கேள்விகள் எதிர் கட்சிகள் கேட்பார்கள் என்று தெரிந்தே நாடாளுமன்றத்தை இழுத்து மூடியது யார் தலைவா?

 • kmathivanan - Trichy ,இந்தியா

  ஜிஹாதிஸ் அண்ட் பாவாடைஸ் அழுவுறாங்க , ஜெய் ஹிந்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  முதலில் ஐந்தாண்டுகள் கொடுங்கள், எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்றார். அதற்கப்புறம் மற்றொரு ஐந்தாண்டுகள். இப்போது இன்ஸ்டால்மெண்ட் வேண்டாம் என்று மொத்தமாக பத்து ஆண்டுகள் கேட்கிறார். இதில் கடந்த ஏழாண்டுகளில் என்ன செய்திருக்கிறார்? ஒன்றும் இல்லை என்பதைவிட, நாட்டை மோசமான நிலைக்கு நகர்த்தியிருக்கிறார். இதை சரி செய்ய பத்து ஆண்டுகள் ஆகும்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  It is better opposition parties don't come to parliament as they are not going to contribute anything constructive . They Will oppose any bills d by government and not allow the house to function .

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  முன்னர் MANAKSHAW ராணுவ தலைவர் RETIRE ஆகும்போது எனக்கு தமிழ் தெலுங்கு கனடிக்க ஹிந்தி எல்லாம் தெரியும் அனால் GUJRATHI தெரியாது என்றார் ஏன் என்று கேட்டபோது ஏன் எனில் REGIMENTIL ஒரு குஜராத்தி காரன் கூட கிடையாது ஆகவே CHANCE வரவில்லை என்கிறார் , இது தான் இந்த GUJARATHIGAL , கடன் வாங்கி உரை விட்டு ஓடும் திருட்டு கூட்டம் அதே நிலை இங்கு வந்து இருக்கும் எல்லா பொது சொத்துக்கள் விற்றாகி விட்டாயிற்று அடுத்து மக்கள் துரத்தும் நாள் வரப்போகுது பாருங்கள்

Advertisement