Load Image
dinamalar telegram
Advertisement

கோவையில் ஒரு குட்டி வாடிகன் காருண்யா நகராக மாறிய நல்லூர் வயல்

Tamil News
ADVERTISEMENT
மத போதகர் பால் தினகரன் நடத்தும், 'ஏசு அழைக்கிறார்', காருண்யா கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், வருமானவரித் துறை சோதனை நடத்தி, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கோவை காருண்யா கல்வி நிறுவனங்கள் மீது மற்றுமொரு புகார் கிளம்பியுள்ளது.கோவை, மத்துவராயபுரத்தைச் சேர்ந்த வக்கீல் ரங்கராஜ் கூறியதாவது:கடந்த 1990களில், காருண்யா நிர்வாகத்தினர், நல்லுார் வயல் பகுதியை, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பெரிய அளவில் மதமாற்றத்துக்கு திட்டமிட்டனர்.

முறைகேடுபிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து, இங்கு பயிலும், 1,000 கிறிஸ்துவ மாணவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர்.உள்ளாட்சி தேர்தலின் போது, மத்துவராயபுரம் ஊராட்சியில், தாங்கள் முன்நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் திட்டமிட்டனர். அப்போது நடந்த ஊராட்சி தேர்தல், கல்லுாரி தேர்தலை போன்று ஆனது. ஆனால், கடவுளின் விருப்பம் வேறாக இருந்தது.தேர்தலுக்கு சற்று முன், காருண்யா நிர்வாகம் - மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள், காருண்யா நிறுவனத்தின் விருப்பத்துக்கு மாறாக ஓட்டளித்தனர்; முடிவும் மாறியது.ஐகோர்ட்டில் முறையிட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்த மாணவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன; மத்துவராயபுரம் ஊராட்சியும், காருண்யாவின் பிடியில் இருந்து தப்பியது.

அடுத்ததாக, மத்துவராயபுரம் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முறைகேடு நடத்தப்பட்டது.இப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருவதால், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகள், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுவதே வழக்கம். ஆனால், அந்த முறை பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை.மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களை ஆராய்ந்தபோது, மத்துவராயபுரத்தில், 100க்கும் குறைவாக ஆதிவாசிகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டிருந்தது.உடனே, பழங்குடி மக்கள், இவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர். அதன்பின் பிரச்னை ஓய்ந்தது; தற்போது, பழங்குடியினர் தான் தலைவராக உள்ளார்.

நிறைவேற்றப்படவில்லைஇந்த இரு பிரச்னைகளைத் தொடர்ந்து, நல்லுார்வயல் பழங்குடியினர் குடியிருப்பை அகற்ற, காருண்யாநிர்வாகம் முயன்றது.அதே நேரத்தில், அப்பகுதியில் பழங்குடியினருக்காக சமுதாயக்கூடம் கட்ட, அரசு திட்டமிட்டது; இந்த திட்டம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை, நல்லுார் வயல் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்று, 'காருண்யா நகர்' என மாற்றப்பட்ட, அந்த பெயரை நீக்கிவிட்டு, மீண்டும் நல்லுார் வயல் என, பெயரிடுவது.தற்போது, எல்லா அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் நல்லுர் வயல் என்றே இருப்பினும், 'காருண்யா நகர்' என்றே அழைக்கப்படுகிறது.காருண்யா காவல் நிலையம், காருண்யா டெலிபோன் எக்சேஞ்ச் மற்றும் காருண்யா தபால் அலுவலகம் என, அரசு நிறுவனங்களும் காருண்யா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.இங்கு, குட்டி வாடிகனாக, நல்லுார் வயலை மாற்ற காருண்யா முயற்சிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மத மாற்ற முயற்சிரங்கராஜ் மேலும் கூறியதாவது:கடவுளின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுவது, அற்புதங்கள் என்ற பெயரில் சாத்தியமற்ற காரியங்களுக்கு உறுதியளிப்பது போன்றவையும் முக்கிய குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன.'குருடர்கள் பார்க்கின்றனர்-; செவிடர்கள் கேட்கின்றனர்;- முடவர்கள் நடக்கின்றனர்' என்பது போன்ற சுவரொட்டிகள், அதிகளவில் மக்களை திசை திரும்புகின்றன.இது குறித்து, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம், பால் தினகரன் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முதல் கட்ட விசாரணையை துவக்கியது. ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, சம்மன் அனுப்பியது. அதற்கு அவர்கள், தடை உத்தரவு வாங்கினர். அதன் பிறகுதான் மதமாற்ற நடவடிக்கைகளை, ஏமாற்றும் செயலை கைவிட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து (39)

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  கொரோனக்கல் பிழைக்கிறார்கள். குருடர்கள் பார்க்கின்றனர்- செவிடர்கள் கேட்கின்றனர்- முடவர்கள் நடக்கின்றனர்' என்பது போன்ற கருத்துக்கள் எவ்வளவு முட்டாள்தனம்? அப்படி என்றால் அணைத்து ஆஸ்பத்தரியையும் மூடி விட்டு இவனிடம் வைத்தியம் செய்ய கிளம்பி விடலாமே அங்கே உள்ளே நடக்கும் பணம் சார்ந்த, பெண்கள் சார்ந்த அநியாயங்கள் இங்கே எழுத்தில் எழுத முடியாது.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  1. மிக பெரிய ஏமார்று வேலை வெளி நாடு டொனேஷனுக்கு கணக்கு காட்டாமல் ஏமாற்றுவது. 2. உதாரணத்திற்கு 1 கோடி வெளி நாட்டு டொனேஷன் பெற்றுக்கொண்டு 100 ரூபாய்க்கு கணக்கு காண்பிப்பது. 3. ஊழியர் சம்பள பணத்தில் ஏமாற்று செய்வது. கூடுதலாக சம்பளம் கொடுத்ததாக கணக்கு எழுதுவது. 4. அரசியல் கட்சிகளின் கருப்பு பணத்தை கமிஷன் பெற்று கொண்டு வெள்ளையாக மாற்றுவது. 5. கருப்பு, கள்ள பணத்தை ஊழியர்களின் வங்கி கண்க்கில் போட்டு கணக்கு காண்பிக்காமல் ஏமாற்றுவது. 6. உள்நாட்டு பணத்தை வெளிநாட்டுக்கும் வெளிநாட்டு பணத்தை உள்நாட்டிலும் ஹவாலா மூலமாக கணக்கில் இருந்து மறைப்பது. 7. செலவுகலில் ஏமாற்று வேலை 8. பினாமி சொத்துக்கள் .9. சொத்துக்களின் மதிப்பை பல மடங்கு குறைத்து வாங்குவது. 10. சட்ட விரோத தொழில்கள் செய்வது . அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது. இவை போன்ற பல செயல்கள் இது போன்ற அமைப்புகளால் நடத்தப்படுகிறது. ஏன் என்று கேட்டால் சிறுபான்மையினர், செகுலரிஸ்ம் இயேசு வருகிறார் என்று பதில் வரும்.

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  முதலில் பால் தினகரன் போன்ற மத போதகர்களுக்கு பண வேட்டையை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும், இவர்கள் உதவி என்று போலியாக செய்யும் சில நவடிக்கைகள் எங்கு மிகைப்படுத்தி கட்டப்பட்டு போலி கணக்கு சமர்ப்பித்து ஒன்றுக்கு நூறு மடங்கு திரும்ப பெறுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து இவர்களது பொய்வேஷம் வெளிச்சப்படுத்தப் படவேண்டும்

 • SIVA - chennai,இந்தியா

  நல்லூர் வயல் போலீஸ் ஸ்டேஷன், டெலிபோன் ஆபீஸ் காணவில்லை என்று எங்கு எல்லாம் முடியமோ அங்கே புகார் பதிவு செய்யவும்

 • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

  , சொந்த மததில் மரியாதையை இல்லாததாள் , அங்கு போறான் , அதை பார்த்து நாம் சரிசெய்து கொள்ளாமல் , பால் தினகரனை பார்த்து இன்ன பயன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement