dinamalar telegram
Advertisement

குடியரசு தின விழாவை ஒட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Share
பெங்களூரு- பயங்கரவாத அச்சுறுத்தலால், குடியரசு தின விழாவை ஒட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.பெங்களூரு கப்பன் சாலையில் உள்ள, மானக் ஷா பரேட் மைதானத்தில், இன்று குடியரசு தின விழா நடக்கிறது.காலை 8:58 மணிக்கு, மைதானத்துக்கு வரும் கவர்னரை, முதல்வர் எடியூரப்பா, வரவேற்கிறார். கர்நாடகாவின் முப்படை உயர் அதிகாரிகள், கவர்னருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவர்.காலை, 9:00 மணிக்கு, கவர்னர் தேசிய கொடியேற்றுவார். கொரோனா தொற்றால், 40 நிமிடங்களுக்குள் விழா முடியும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை 5:30 மணிக்கு, ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில், சுதந்திர போராட்ட வீரர்கள், முதல்வர், அமைச்சர்கள் உட்பட உயர் அதிகாரிகளுக்கு, கவர்னர், குடியரசு தின விருந்து வழங்குகிறார்.பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், விழா நடக்கும் மைதானம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், வரலாற்று நினைவு சின்னங்கள், முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'அழைப்பிதழ் வைத்திருப்போர் மட்டுமே விழா மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் வருவதை தவிர்க்கவும்' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த், நேற்று, தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement