இது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல!
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எம்.ராஜா, வெள்ளக்கிணறு, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,
மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைக்கும் எண்ணற்ற வாக்காளர்களில், நானும்
ஒருவன். அதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும், கூற விரும்புகிறேன். கடந்த, 2006- - 2011ல் நடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, 16 மணி நேர மின்சார வெட்டால் பொதுமக்கள், தொழில்துறையினர் பட்ட அவதியை, சொல்லி மாளாது. இப்போது புதிதாக ஓட்டு போடும், 18 வயது நிரம்பிய இளைய சமுதாயத்திற்கு, அன்றைய மின்வெட்டின் பாதிப்பு குறித்து அவ்வளவாக தெரியாது; இது குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து, காவல் நிலையங்களில் அத்துமீறல் என, தி.மு.க.,வினர் போட்ட ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்கட்சி, மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் அவ்வளவு தான். தற்போது ஆட்சியில் இல்லாதபோதே, தி.மு.க.,வினர் செய்யும் அராஜகங்கள் தலைவிரித்தாடும் போது, அதிகாரம் கிடைத்தால், என்ன செய்வர் என்பதை, நினைத்து பார்க்க வேண்டும். தி.மு.க.,வினர், தங்களது ஆக்டோபஸ் கரங்களால், தொழில் துறையை வளைத்து, வேறு யாரும் தொழில் செய்ய விடாமல், அடாவடி செய்த கடந்த காலத்தை, நாம் மறந்து விடக் கூடாது. ஹிந்து விரோத போக்கில், தி.மு.க., தீவிரமானது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், ஹிந்து மதத்தை அழிக்க, எத்தனை வழியுண்டோ, அத்தனையையும் நடைமுறைப்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அநாகரிகமாக பேசுவதிலும், வன்முறையை துாண்டுவதிலும், தி.மு.க.,வை யாரும் மிஞ்ச முடியாது. கடந்த, 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால், தி.மு.க.,வினர் அதிகார பசியோடு உள்ளனர். ஆட்சி, அவர்களின் கையில் கிடைத்தால், தமிழகம் நிர்மூலமாகி விடும். அ.தி.மு.க.,
ஆட்சியில், சில குறைகள் இருக்கலாம். ஆனால், தி.மு.க., போல தீய கட்சியாக, அ.தி.மு.க.,
என்றுமே இருந்தது கிடையாது. முதல்வர் இ.பி.எஸ்., கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும், சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார்; மிகவும் எளிமையான மனிதராக, அவர் விளங்குகிறார். கொரோனா காலத்தில், அ.தி.மு.க., அரசு மிக சிறப்பாகவே செயல்படுகிறது.
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. மத துவேஷம் இல்லாத கட்சி, அ.தி.மு.க., என்று உறுதியாக கூறலாம். மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் வளர்ச்சி பணிகள் மிகுந்த
அளவில் நடைபெற்று வருவதை, யாரும் மறுக்க முடியாது. தி.மு.க.,வை மீண்டும் அரியணை
ஏறவிடாமல் செய்ய வேண்டியது, தமிழக மக்களின் கடமை.
வாசகர் கருத்து (192)
‘போலி’ விவசாயி ஊர்வலத்தால்...நாட்டில் பெட்ரோல் & டீசல் விலை ஏறினதுதான் மிச்சம்...இந்த ‘போலி’ விவசாயிகாலை பாலிஸ்தானுக்கே அடித்து துரத்தவேண்டும்...
தேச துரோகி... P-சீ-dumb-பாரம் மாதிரி, இந்தியா ரூபாய் நோட்டடிக்கும் மெஷினை மட்டும் பாகிஸ்தானுக்கு வித்தவன்தான்... ‘வித்துவான்’...
தீயமுக & தீகா தொடர்பு உடைய இந்தியர்களுக்கு எந்த பதவியும் இல்லை என்று அமெரிக்காவின் புதிய அதிபர் பிடன் அறிவித்துள்ளார் , அவர்களுக்கு தெரிகிறது தீயமுக & தீகா என்பது நாட்டில் மத கலவரம் செய்து மக்களை பிரிக்க பார்க்கும் இயக்கம் என்று உள்ளூர் காரனுக்கு தெரியல...
தமிழ் நாட்டையே கொள்ளை அடுச்சு நாசம் பண்ணிட்டாங்க ,நல்ல ஆட்சியாம் எல்லாம் ஒரு மூணு மாசந்தா .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
"அவாளுக்கு" அதிமுக ஆட்சியில் எல்லாம் சரிதான். Sterlite நடக்கவில்லை, பொள்ளாச்சி சம்பவம் நடக்கவில்லை, ஐல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை நடக்கவில்லை, ஏன் சமீபத்தில் போஸில் ஒருவரே குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் அது கூட நடக்கவில்லை....