dinamalar telegram
Advertisement

கோவையில் மாரியம்மன் கோவிலில் சிலைகள் சேதம்

Share
பெ.நா.பாளையம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குமரபுரம் என்ற பகுதியில் மெயின் ரோட்டில மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், சிலை, சூலாயுதம் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிலைகள் மேல் இருந்த துணிகளுக்கும் தீவைத்துள்ளனர். இன்று மதியம் முதல்வர் பழனிசாமி, இந்த பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அதிமுகவினர் அந்த பகுதியில் கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனனர். போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். ஆள் நடமாட்டம் இருந்த நிலையில், மர்ம நபர்கள் கோவிலில் சிலைகளை சேதப்படுத்தியது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    கயவர் கையில் வேல் சிக்கியதால் வந்த விபரீதம். அவர் கையில் இருந்து வேலை பிடுங்கி எறியுங்கள்.

Advertisement