கோவில் தரைமட்டம்? போலீசில் பகீர் புகார்
அவிநாசி:அவிநாசியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தனித்தனியாக வழங்கிய மனு:அவிநாசி தாலுகா, அய்யம்பாளையம் கிராமத்தில், விளையாட்டு மைதானம் அருகே, 200 ஆண்டு பழமை வாய்ந்த வேப்ப மரத்தை வேருடன் தோண்டியும், அதனடியில் இருந்து பழமையான கற்கோவிலை இடித்து தரைமட்டமாக்கியும் உள்ளனர்.அங்கிருந்த பழமையான சிவலிங்கம், நந்தி சிலைகளை கடத்தி சென்றுள்ளனர். இது, சிவபக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!