Load Image
Advertisement

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு

 கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு
ADVERTISEMENT

சென்னை: கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.


'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். கிறிஸ்துவ மதபோதகரான இவர் கோவையில் காருண்யா பல்கலை.,யும் நடத்தி வருகிறார். இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என பால் தினகரன் மீது புகார் எழுந்தது.
Latest Tamil News

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. Latest Tamil News


வாசகர் கருத்து (227)

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    போன தேர்தலின் போது "கல்கி சாமியார்" ன்னு ஒரு டுபாக்கூர் கிட்டேருந்து பொண்டாட்டி சகிதமா 5,000 கோடி அள்ளியிருக்கோமுன்னு கலர் கலரா செய்தி வந்தது.. அது என்னாச்சுன்னு யாருக்காவது தெரியுமா? கமிஷன் எவ்வளவு அடிச்சாங்கன்னு சொல்லுவாங்களா, மத்த சாமியாருங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.. மெஜாரிட்டி மதமும் வளரனும் இல்லியா..

  • S.Kannan - Thiruchy,இந்தியா

    காருண்யா யூனிவர்சிட்டில வேலை செய்யற ஸ்டாப்புங்களுக்கு அதிஷ்டம் அழைக்குது...அள்ளுங்க அள்ளுங்க பணத்தை அள்ளுங்க

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    வரி ஏய்ப்பு செஞ்சவன் எல்லாம் தேசத்துரோகிங்கன்னா மொத்த குஜராத்தையும் நாடு கடத்தோணும்..

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    எல்லாத்துக்கும் ஒரு விலை போட்டு கமிஷன் பார்க்கும் அரசாங்கம் இயங்கும் போது, இந்த செய்திகள் எல்லாம் பரபரப்புக்கு தான்.. அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டு தான் இருப்பான், அவன் கிட்டேருந்து பிடிக்கிறவன் அடிச்சிக்கிட்டு இருக்கான்.. நாம தான் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கோம்.

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    மதங்கள் என்றாலே மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் காசை ஆட்டையை போடுறது தான்.. மதவெறி பிடிக்க வெச்சி சண்டையை மூட்டிவிட்டு ரத்தம் குடிக்கிறது போனஸ்.. Peaceful Religion is oxymoron.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement