dinamalar telegram
Advertisement

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி

Share
பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்டில் சுப்மன் கில் , புஜாரா, ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (91) அரைசதம் கடந்தார். கேப்டன் ரகானே (24) நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிய புஜாரா (56) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் (9) நிலைக்கவில்லை. லியான் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (22) போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷர்துல் தாகூர் (2) வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (89), நவ்தீப் சைனி (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

ரூ.5 கோடி பரிசுஆஸ்திரேலியா உடனான தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 430 புள்ளிகளுடன் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாராட்டுஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (57)

 • Ramamurthy Ramani - Chennai,இந்தியா

  ஆஸ்திரேலியா வேகமாக ரன் எடுப்பவர்கள். அதே போல் எதிர் அணியும் வேகமாக ரன் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள். அவர்கள் இதை டெஸ்ட் மேட்ச் என்பதாக நினைப்பதில்லை. பொறுமையாக ரன் எடுப்பதுவும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் முக்கியம். அவர்களின் அவசரம் நம்மிடம் பலிக்கவில்லை. இதை ராகுல் டார்விட - VVS லக்ஷ்மணன் ஜோடி, பூஜாரா செவுள் ஜோடி என பல ஜோடிகள் AUS பந்து வீச்சாளர்களை விரக்தி அடைய செய்தனர். இந்த பொறுமைதான் வேற்றி.

 • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

  அனைவருமே அனுபவ வீரர்களாகத்தான் மட்டுமே டெஸ்ட் போட்டிக்கு வேண்டும் அப்போதுதான் ட்ராவாவது செய்ய இயலும் என்ற மனப்போக்கை செலக்சன் போர்ட் மாற்றிக்கொள்ள வேண்டும், இளம் கன்றுகள் பயமறியாது என்பதால் ஒன்றிரண்டு பவுட்டரி அடித்து மிரட்டினாலே பந்துவீச்சாளரின் வீசுதிறன் பாதிக்கப்பட்டு ஆட்டம் நமக்கு சாதகமாக திரும்பிவிடும், இந்த கடைசி டெஸ்ட் அதைத்தான் நிருபிக்கிறது, 300பந்துகளை எதிர்கொண்டு 24ஓட்டம் 120பந்துகளை எதிர்கொண்டு 20ஓட்டம் என்று அனுபவ வீரர்கள் எடுத்து அவுட்ஆகும்போது அடுத்த இன்னிங்ஸ் சாதகமாக அமையாது,

 • Prabhu Balasubramaniam - London,யுனைடெட் கிங்டம்

  Adipatta puli kangaroo vai vettaiyadiyathu

 • IndiaTamilan Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  இந்தியா அமைதியான நாடு வெற்றிகள் குவியும் முதல் இடம் பெரும் , ஆஸ்திரேலியா ???

 • IndiaTamilan Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  இந்தியாவின் இளம் புலிகள் வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் கங்காருக்களை.

Advertisement