dinamalar telegram
Advertisement

சசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

Share
புதுடில்லி: சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி நேற்று விமானம் மூலம் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடியை பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

சந்திப்பிற்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன். புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறியுள்ளார். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன்.

சசிகலாவால் மாற்றம் வருமா ?இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான நீண்ட நாள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் ரீதியாக வேறு எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது. என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் தொடர்ந்து 3வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.

சசிகலா விடுதலை ஆனாலும், அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை. சசிகலா விடுதலையால் கட்சிக்குள் எந்த மாற்றமும் ஏற்படாது. அவருடன் இருந்தவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்து விட்டனர். இன்னும் சிலர் மட்டும் அவருடன் உள்ளனர். சசிகலாவை கட்சியில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (91)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அன்று ஒருவர் குனிந்து தவழ்ந்து சென்று இன்று பதவியில் இருக்கிறார் .. ஆனால்... அன்று சின்னம்மா தியாகத்தாய் கழக பொதுச்செயலாளர் தியாகாதலவி என்றெல்லாம் அடுக்கு மொழிகளில் ஆரவாரம்,, இன்று இடமில்லையாம் சசிகலாவுக்கு .. இந்த விவரம் முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  இரண்டு பகுதிகளையும் சரியாக இணைக்கவும் ..

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  மதுரை திருமங்கலம் நகராட்சியின் லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் நகராட்சியில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் நகராட்சியின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட டவுன் பிளானிங் அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் நகராட்சியின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் நகராட்சிக்கு

 • iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்

  ஆமா மே மாசத்துக்கு அப்பறோம் அமைச்சரவையில் உங்களுக்கு முதல இடம் இருக்கானு பாருங்க கவுண்டர்..

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  இவருக்கு உண்மையில் வீரம் தாஸ்தி தான் Owner ஐயே இப்படி சொல்லுகிறார் , owner வெளி வந்தவுடன் ஆட்டம் தொடரும்

Advertisement