dinamalar telegram
Advertisement

மல்லையா நாடு கடத்தல் எப்போது? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்!

Share
புதுடில்லி : 'வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவை, பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன.

அங்குள்ள சில சட்டப் பிரச்னைகளால், அது தாமதமாகிறது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், 9,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.கடந்த, 2016ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை, நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டது.

இது தொடர்பான வழக்கு, பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மல்லையாவை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கை, நீதிபதிகள், யு.யு. லலித், அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணை யின்போது, மத்திய அரசின் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:மல்லையாவை நாடு கடத்தி வருவது தொடர்பாக, பிரிட்டனுடன், நம் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது. மத்திய அரசு, அனைத்து வழிகளிலும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமீபத்தில், பிரிட்டன் அரசின் சார்பில், நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 'பிரிட்டன் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவை முடிவு அடைந்த பிறகே, மல்லையாவை நாடு கடத்த முடியும். அதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை, மார்ச், 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  தேவைல்லாமே ஓடிப்போயிட்டாயே ராசா ... இங்கயே இருந்திருந்தா எல்லா கடனும் தள்ளுபடி ஆகியிருக்கும் ..

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  இங்கே வந்தாலும் ஒரு பைசா வசூல் செய்யப்போவதில்லை ஏனினில் இந்தியா தண்டனை சட்டம் அப்படி ...

 • venkates - ngr,இந்தியா

  adhika pacha thandanai kodukkanum

  • Srinivas - Chennai,இந்தியா

   அதிபட்ச தண்டனை?இந்த ஆட்சியில்? எப்போது? அடுத்த நூற்றாண்டிலா?

 • vbs manian - hyderabad,இந்தியா

  பிரிட்டன் சட்டத்தை காட்டி தாமதப்படுத்துகிறது. இந்த மல்லாய்வுக்கு நீதி நேர்மை இவற்றில் நம்பிக்கையிருந்தால் தானாக முன் வந்து சரணடைய வேண்டும். மக்கள் போட்ட பணத்தை எடுத்து கொண்டு ஓடுவது ஒரு பெரிய மனிதனுக்கு அழகா.

 • ஆரூர் ரங் -

  எல்லாத்தையும் விட மோசமான கடன் ? அரசு வங்கியிடம் அடகுவைக்க வெறெதுவும் இல்லாததால் கிங் ஃ பிஷர் எனும் பெயரை அடமானமாகப்பெற்று 5000 கோடி கடன் கொடுத்ததுதான் 😡. சிபாரிசு? அப்போது ஆண்டு கொண்டிருந்த இரு 😉பொருளாதார மேதைகள்தான் .இப்போ வட்டி குட்டிப்போட்டு 15000 கோடி ஆகியிருக்கும். அதனை வசூல் செய்யவும் முயற்சிக்காமல் இங்கேயே ஜாலியாக இருக்க அனுமதித்தனர். பாஜக வசூலில் கடுமையாக இருக்கும் எனப் புரிந்தவுடன் தப்பித்து ஓட்டம். இங்கேயே வைத்து பாதுகாத்தவர்கள்தான் உளவு சொன்னதும்

  • Srinivas - Chennai

   அவனை பிடித்துகொண்டுவர லாயக்கில்லை....இதில் விளக்கம் வேறு? மக்களுக்கு தெரியாத இந்த கும்பலின் நாடகம்...

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு

   இந்தாளு மட்டுமா.... லலித் மோடி, நீரவ் மோடி, சோட்சி, நித்தி.... ன்னு எல்லவனையும் பத்திரமா அனுப்பி வச்சிட்டு பேச்சைப் பாரு...

Advertisement