சமூக வலைதளங்களில், மிகவும் முக்கியமானது, 'வாட்ஸ் ஆப்!' அமெரிக்காவை சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, வாட்ஸ் ஆப், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும், 40 கோடிக்கும் மேற்பட்டோர், இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கூறி, சமீபத்தில், 'பிரைவசி பாலிசி' எனப்படும், புதிய தனியுரிமை கொள்கையை, வாட்ஸ் ஆப் வெளியிட்டது. இந்த புதிய கொள்கையை, பிப்ரவரி, 8ம் தேதிக்குள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் ஏற்க வேண்டும்; இல்லையெனில், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், தெரிவித்தது. மேலும், புதிய கொள்கைப்படி பயனாளிகளின் செயல்பாடு, அவர்களின் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை, வாட்ஸ் ஆப் நிறுவனம், தானாகவே சேகரிக்கும். அதை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பகிரும். வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த புதிய தனியுரிமை கொள்கை, பயனாளிகள் மத்தியில், கொந்தளிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்தியா உட்பட, உலகம் முழுதும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாட்ஸ் ஆப்பை நீக்கி விட்டு, மாற்று சமூக வலைதளங்களை பயன்படுத்த துவங்கினர். இதனால், அதிர்ந்து போன வாட்ஸ் ஆப் நிறுவனம், புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதை, மே, 15ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் நீங்கள் பகிரும் தகவல்கள் உங்களுடனேயே இருக்கும். அதாவது, உங்களின் தனிப்பட்ட உரையாடல்கள், எப்போதும் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட தகவல்களை, வாட்ஸ் ஆப்போ, பேஸ்புக்கோ பார்க்க முடியாது.'உங்கள் தொடர்புகளையும், பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர மாட்டோம். வாட்ஸ் ஆப், உங்கள் மொபைல் எண்களை பேஸ்புக்கிற்கு வழங்காது. பயனாளிகளாகிய உங்கள் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படும்' என, தெரிவித்துள்ளது. புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காவிடில் வெளியேறுங்கள் என எச்சரித்த, வாட்ஸ் ஆப் நிறுவனம், தற்போதைக்கு சரண்டர் ஆகியுள்ளது.
இதற்கிடையில், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டிலும், இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள புதிய கொள்கை, பொதுமக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது, சுதந்திரமான செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலானது என்பதில், எந்த விதமான சந்தேகமும் இல்லை. வாட்ஸ் ஆப், தற்போதைக்கு புதிய கொள்கையை அமல்படுத்துவதை தள்ளி வைத்திருந்தாலும், எதிர்காலத்தில் அது வேறு வடிவத்தில் அமலாகாமல் தடுக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வாட்ஸ் ஆப் பயனாளிகளின் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கு பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும்.
நம் நாட்டில் வாட்ஸ் ஆப்பிற்கு அனுமதி அளித்த மத்திய அரசு, இந்த விஷயத்தில் வேடிக்கை பார்க்கக் கூடாது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை, எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், இதைச் செய்ய வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில், வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது நேரிட்டால், அதையும் துணிச்சலாக செய்யலாம்.
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்க நேரிட்டால், தனி நபர்களின் தகவல்கள் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்கப்படலாம். அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களை தந்திரமான முறையில் வீழ்த்தி, அரசு தொடர்பான முக்கிய ரகசியங்களைப் பெறலாம். ராணுவ ரகசியங்கள் கூட, கசியும் அபாயம் உருவாகலாம். நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீன மொபைல் செயலிகள் பலவற்றுக்கு, சில நாட்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது. அதுபோல, வாட்ஸ் ஆப் நிறுவனமும், மே மாதத்திற்கு பிறகு, தங்களின் புதிய கொள்கையை ஏற்க வேண்டும் என, பிடிவாதம் செய்தால், மத்திய அரசு அதற்கு தடை விதிப்பது பற்றி பரிசீலிப்பது அவசியம்.
அதுமட்டுமின்றி, இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் தகவல்களையும் பாதுகாக்கும் வகையிலான, புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவாக இயற்ற வேண்டியது அவசியம். அதைச் செய்தால், வாட்ஸ் ஆப் போன்ற நிறுவனங்கள், வரும் நாட்களில் தனி நபர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் தடுக்கப்படும். இந்தியர்களும், அதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு குட்பை சொல்லும் நிலைமை உருவாகும். அதை, மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!