dinamalar telegram
Advertisement

சென்னையில் இருந்து படேல் சிலைக்கு சிறப்பு ரயில்: பிரதமர் துவக்கி வைத்தார்

Share
புதுடில்லி: சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியாவிற்கு சிறப்பு ரயில்களை பிரதமர் துவக்கி வைத்தார்.


குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண செல்லும் வகையில், 8 சிறப்பு ரயில்களை துவக்கி வைத்தார். சென்னை, டில்லி, மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் இருந்து கேவாடியாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜன.,20 முதல் சென்னையில் இருந்து கேவாடியாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரயில்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம். எட்டு இடங்களில் இருந்து கேவாடியாவுக்கு ரயில்கள் செல்லும். இன்று துவக்கப்பட்ட 8 ரயில்களில், ஒரு ரயிலானது சென்னையில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. இன்று அவரது பிறந்த நாளில், இது நடப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர்., தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணித்தவர். இந்த ரயில்களானது, ஒற்றுமை சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும். கேவாடியாவின் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஒற்றுமை சிலையை பார்வையிட அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பார்க்க வருபவர்களை விட, கேவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியில் கேவாடியா முன்னேறி வருகிறது. இந்த நகரத்திற்கு அனைவரும் வர வேண்டும். முன்பு கிராமமாக இருந்த கேவாடியா, இன்று சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (36)

 • V Mohan - London,யுனைடெட் கிங்டம்

  It is sad so many don't understand how pride for India this is. This is world's largest statue which should proud as it is for one of the hero. This statue is not government funded fully. 70% is trust and private fund this has already started collecting almost 50% back. It is great place for tourism so money is not to private hands but to the government after maintenance. This is not DMK project where public money is taken and goes into their family pocket. People of TN should wake up .

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்னு சொல்ற நாம், அந்த சிலையை நாம செய்திருக்கணும்.... இது, காலத்துக்கும் சீனாக்காரன ஞாபகப் படுத்தும்..

 • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

  கட்டுமரம் பெயரில் உள்ள குடியிருப்புகள் சர்தார் படேல் நகர் என்று மாற்றப்படவேண்டும் ...அண்ணா நகர் நேதாஜி நகர் என்று பெயர்மாற்றம் செய்யப்படவேண்டும் ....பெரியார் நகர்கள் அனைத்தும் ஜெயஹிந்த் செண்பகராமன் நகர் என்றோ வஉசி நகர் என்றோ பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் .....அண்ணா பெரியார் கட்டுமரம் போன்றொல் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன பெரிய தியாகம் செய்தார்கள் ? டுபாக்கூர் ஆசாமிகள்

 • Naresh Giridhar - Chennai,இந்தியா

  நாடு இருக்கும் நிலையில் இந்த ரயில் ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும் ?

 • Raj - nellai,பஹ்ரைன்

  ஆர் ஸ் ஸ் தடை செய்தவர் படேல்

  • Dr என்கிற பெயரில் உள்ள கேடி Suriya - கூவம் காவா ஓரம் ,எத்தியோப்பியா

   நம்ம மோடிஜி அவர்களே மக்கள் சேவக் என்று சொல்லி வந்து விட்டு இன்று CORPORATE SEVAK என்று இல்லையா என்ன

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   இதை செய்ய உள்துறை அமைச்சராக இருந்த படேலுக்கு நேரு குடும்பம் மூலம் எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று தெரியுமா? கொஞ்சம் வரலாறு படிக்கவும்.

Advertisement