dinamalar telegram
Advertisement

அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் ; வீறுகொண்ட வீரர்கள்

Share

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நடக்கும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா இன்று (14 ம்தேதி) காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்தது.



அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முதன்முதலாக அவனியாபுரம் பாலகுருநாதன் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

விழா துவங்கும் போது டோக்கன் வாங்காத நபர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேச்சு நடத்தி அவர்களை வெளியேற்றினர்.

Tamil News
Tamil News
Tamil News


700க்கும் மேற்பட்ட மாடுகளும் , 420 வீரர்களும் இந்த போட்டியில் பங்கெடுக்கின்றனர்.
வீரர்கள் உற்றசாகமாக சீறிப்பாயும் காளைகளை பிடித்தனர்.





8 சுற்றுகள் நடந்த ஜல்லிக்கட்டில், 520 காளைகள் பங்குபெற்றன. 420 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயமடைந்தனர்.
சிறந்த வீரர்களாக திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகியோர் தேர்வு பெற்றனர். சிறந்த காளையாக கார்த்திக் என்பவரது காளை தேர்வானது.

இந்த ஜல்லிக்கட்டை காங்கிரஸ் எம்.பி., ராகுல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ராகுல்ஜியை மாடுபிடிக்க விட்டிருக்கலாம்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மொளகாப்பொடியெ கண்ணுல தூவி, வால முறுக்கி, (டிண்குவில) ஈட்டியால குத்தி உட்டதாலதான் காளைங்க "உட்டாப்போதும்"னு சீறி பாயிதுங்க

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    சும்மா வாலைப் பிடிப்பவனெல்லாம் வீரனாம்.

    • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

      நீ குண்டு வைப்பவன தானே வீரன்னு புகழுவ

    • Pavithra - Bengaluru,இந்தியா

      இங்க மட்டும் என்ன வாழுதாம்? வெள்ளைக்காரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வாழ்நாளெல்லாம் விசுவாசமாய் இருப்பேன்னு சொன்னவர் தான் உங்கள் சித்தாந்த பிதா

  • ஆரூர் ரங் -

    அப்பாவி மாடுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்😢. அடுத்த ஜன்மத்திலாவது அஹிம்சையுள்ள மாநிலத்தில் பிறக்கட்டும்

  • Elango - Sivagangai,இந்தியா

    தமிழக அரசே இங்கு கொரானா வரதா உடனே பள்ளிகளை திற.... திரை அரங்கிலும் விதி முறை மீரா படுகிறது தமிழக அரசே கல்வி கற்க பள்ளிகளை திற....

Advertisement