dinamalar telegram
Advertisement

கோமாவில் எஸ்.ஐ., அரசு உதவ கோரிக்கை

Share
Tamil News
ஓசூர்:பணியின் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த எஸ்.ஐ., 10 மாதங்களாக, 'கோமா' நிலையில் உள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் பாலாஜி, 55; கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச், 19 இரவு, 11:30 மணிக்கு, பேரிகை - மாஸ்தி சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அதிவேகமாக வந்த ஸ்பிளண்டர் பைக், அவர் மீது மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார்.

அவரை, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 10 மாதங்களாக கோமா நிலையிலேயே உள்ளார். இதுவரை மருத்துவ செலவு, 95 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.அந்த மருத்துவமனையில், எந்த மருத்துவ காப்பீடும் ஏற்றுக் கொள்ளப்படாததால், தமிழக அரசு உதவும் என்ற நம்பிக்கையில், பாலாஜியின் மனைவி சித்ரா, 46 மற்றும் குடும்பத்தினர், உறவினர்களிடம், கடன் வாங்கி செலவழித்தனர்.

இதுவரை எந்த உதவியும் வராத நிலையில், உறவினர்கள், பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர். ஓசூர், சப் - டிவிஷன் போலீசார் சார்பில், மருத்துவ செலவுக்கு, 4.75 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மருத்துவ செலவுக்கு பணம் செலவழிக்க முடியாமல், அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

'பணியின்போது காயமடைந்த, தன் கணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளார். உதவ நினைப்பவர்கள், 97503 52494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    ஒரு நொடியில் ஏற்பட்ட மாற்றத்தில் இன்று எஸ் ஐ நிலைமையை ஒவ்வொருவரும் பார்த்து திருந்துதலே மனித மாண்பு .. எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் எப்பவும் நடக்கலாம் .. இதில் விதிவிலக்காகாக தர்மம் செய்பவர்கள் ..நீதி பாலிப்பவர்கள் ,மனிதநேயத்தினர் இருப்பது உண்மை ..

  • periasamy - Doha,கத்தார்

    ஊழல் ராணிக்கு நினைவு ஆலயம் இந்த மக்கள் விரோத அரசு மக்கள் பணத்தில் செய்யும் பொது பணியின் பொது ஏற்பட்ட விபத்திற்கான முழு செலவையும் கட்டாயம் அரசு ஏற்க வேண்டும் என்பது நடைமுறை ஆனால் இந்த அடிமை அரசு அப்படியெல்லாம் செயல்பட இடமில்லை

  • சம்பத் குமார் -

    1).பணியிலிருந்தபோது விபத்து ஏற்பட்டு உள்ளது.2). முதல்வர் அவர்கள்,இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி ஐயா.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    உடனடியாக அதிமுக 5 கோடி கொடுக்க வேண்டும்.

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    சோகம் .அரசு உடன் உதவும் என நம்புகிறேன் .தினமலர் வாசகர்கள் உடன் செய்வார்கள் .

Advertisement