dinamalar telegram
Advertisement

நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி

Share
புதுடில்லி : டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டட கட்டுமான பணி நாளை (ஜன.,15) துவங்குகிறது.

டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம் 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களினால் அதன் அருகிலேயே 971 கோடி ரூபாய் செலவில் புதிய பார்லி கட்டடம், தலைமை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் கட்டவும் மூன்று கி.மீ. தொலைவிலான ராஜபாதையின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கான கட்டுமான பணி ஒப்பந்தம் 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி புதிய பார்லி கட்டட கட்டுமானப் பணிகளுக்கான புராதன கட்டட பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் ஜன., 11ல் கிடைத்தது. இந்நிலையில் புதிய பார்லி.யின் கட்டுமான பணிகள் நாளை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தை மாத பிறப்பு மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் சூரிய உதய தினம் நல்ல காரியங்களை துவங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுவதால் கட்டுமானப் பணிகளை நாளை முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை 10 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு புணரமைக்கப்பட்ட ராஜபாதையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Elango - Sivagangai,இந்தியா

  இந்தியாவில் கோடி கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவிற்காக தவித்து வருகின்றனர்.... பல ஆய்ரம் கோடி செலவில் இந்த பார்லிமென்ட் இப்ப எதற்கு...இப்ப இருக்க பார்லிமென்டில் கூட்டம் கூட்ட இந்த அரசு தயங்குது புதுசு இப்ப எதுக்கு சார்...ஓ இங்க தூக்கம் அங்க சாப்பாடு சூப்பர்....

 • Indian-இந்தியன் - M City,இந்தியா

  மகிழ்ச்சி.....

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  மோடிஜியின் ஆட்சியில் கட்டப்படவிருக்கும் பாராளுமன்றத்தை பார்க்கவும். எவ்வளவு அருமையான டிசைனாய் ஜொலிக்கிறது. இப்போது, திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி கட்டி கொடுத்த மிக பெரிய தண்ணீர் சுட வைக்கும் சட்டசபை அண்டாவை பார்க்கவும். யார், ஊழல் கரை படியாத தலைவர் என்று உங்களுக்கே புரியவரும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அருமை.. நல்லதை தள்ளிப்போடக்கூடாது. நல்ல திட்டங்களை பாஜக, மோடிஜி தவிர வேறு யாரால் செயல் படுத்த முடியும்? எதிர்கட்சிகளால் முட்டுக்கட்டைதான் போடமுடியும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இதுக்கு பதிலா சென்னை டு மும்பை புல்லட் ரயில் விட்டு இருக்கலாம் . ஏற்கனவே பாராளுமன்றம் இருக்கே அப்புறம் எதுக்கு புதுசா ஒன்னு ? இல்ல மதுரை எய்ம்ஸ் கதிதான் இதுக்குமா ?

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஏற்கனவே சட்டசபை இருந்ததே. ஆனால் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி மிக பெரிய தண்ணீர் சுடவைக்கும் அண்டாவை கட்டிக்கொடுத்துவிட்டு அதற்கு சட்டசபை என்று பெயரிட்டு 450 கோடிகள் பில் போட்டு மக்கள் வரிப்பணத்தை அசால்ட்டாக ஆட்டையை போடவில்லையா? அந்த தண்ணீர் சுடவைக்கும் அண்டாவை கட்ட துவங்கும்போது சொன்ன தொகை 200 கோடி ரூபாய். கட்டிமுடித்ததும் கட்டுமரம் கருணாநிதி சொன்ன தொகை 450 கோடி ரூபாய் ஆகிவிட்டது என்று. இப்போது புரிகிறதா விஞ்ஞான முறையில் ஆட்டையை போடுவதில் வல்லவர் கட்டுமரம் கருணாநிதி என்று. இப்போது கட்டப்படவிருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திற்கே செலவு 900கோடிகள்தான். 12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சட்டசபைக்கு 450 கோடிகள். கும்புடுறேன் சாமி மாதிரியாய் கூழை கும்பிடு போடும் கூட்டம் இருக்கும் வரையில் திருட்டு திமுக காட்டில் மழைதான்.

Advertisement